ப்ரொஃபஸர் கேரக்டருக்கு விஜய் சரியாக இருப்பார்... அப்போ அஜித் - மனி ஹெய்ஸ்ட் இயக்குநர் பதில்

அலெக்ஸ் ரோட்ரிகோ | விஜய்

கடந்த சில மாதங்களுக்கு மனி ஹெய்ஸ்ட் தொடரின் இந்திய உரிமையை நடிகர் ஷாரூக் கான் பெற்றுள்ளதாகவும், அதில் அவரே ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

 • Share this:
  ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் தொடரில் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்துக்கு விஜய் சரியாக இருப்பார் என அந்த தொடரின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

  நெட்ஃப்ளிக்ஸில் மிகப்பெரிய ஹிட் தொடராக கொண்டாடப்படுவது கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்திய மனி ஹெய்ஸ்ட் (Money Heist). இத்தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடரில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

  இந்நிலையில், இந்திய திரை நட்சத்திரங்களில் யார்? ப்ரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ, நடிகர் விஜய் சரியாக இருப்பார் என தெரிவித்தார். பொகோட்டா கதாபாத்திரம் அஜித்துக்கும், போலீஸாக வரும் சுவாரஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கும் சரியாக இருக்கும் என்றும் பெர்லின் கதாபாத்திரம் ஷாருக் கானுக்கும், டென்வெர் கதாபாத்திரத்துக்கு ரன்வீர் சிங் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் அலெக்ஸ் ரோட்ரிகோ குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

  கடந்த சில மாதங்களுக்கு மனி ஹெய்ஸ்ட் தொடரின் இந்திய உரிமையை நடிகர் ஷாரூக் கான் பெற்றுள்ளதாகவும், அதில் அவரே ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published: