ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

VJ Rakshan Instagram : இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ் - நன்றி தெரிவித்த விஜய் டிவி பிரபலம்

VJ Rakshan Instagram : இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ் - நன்றி தெரிவித்த விஜய் டிவி பிரபலம்

தொகுப்பாளர் ரக்க்ஷன்

தொகுப்பாளர் ரக்க்ஷன்

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்ஸைப் பெற்றுள்ள தொகுப்பாளர் ரக்க்ஷன், தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக ரக்க்ஷன் இருந்து வருகிறார். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசன் குக் வித் கோமாளி மிகப்பெரிய ஹிட்டானது. அந்த நிகழ்ச்சியில் வந்த புகழ், சிவாங்கி, அஷ்வின், பாலா, சரத் ஆகியோருக்கு புதிய பட வாய்ப்புகளும் தேடி வந்துள்ளன.

தற்போது பிஸியாக இருக்கும் அவர்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்த ஷோவில் தொகுப்பாளராக வந்த ரக்க்ஷனும், கோமாளிகளுடன் இணைந்து செய்த காமெடிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ALSO READ |  190 பேருக்கு தலா 1000 ரூபாய் - சத்தமில்லாமல் உதவிய விஜய் சேதுபதி!

மேலும், போட்டியாளர்களுக்கு சமையலுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மட்டும் இல்லாமல், போட்டியாளர்களுடன் இணைத்து தன்னுடைய தனித்திறமைகளையும் வெளிக்காட்டினார்.

சிறந்த பர்ஃபாமராகவும் ரக்க்ஷன் இருந்ததால், அவரை கான்செப்டுக்குள் உள்ளே இழுத்து கன்டென்டாகவும் போட்டியாளர்கள் மாற்றிக் கொண்டனர். ரக்க்ஷனும் சளைக்காமல் போட்டியாளர்களிடம் இருந்து கவுண்டர் வாங்குவதையும், சில இடங்களில் மாஸ் கவுண்டர்களையும் கொடுத்து வந்தார். குக் வித் கோமாளியில் அவர் அடித்த கவுண்டர்களும் பலரையும் ரசிக்க வைத்தது.
 
View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)இவ்வளவு புகழ் கிடைத்த அவருக்கு மேலும் ஒரு மகுடமாக இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர். இதனால் நெகிழ்ந்துபோயுள்ள ரக்க்ஷன் தன்னுடைய பாலோயர்ஸூக்கு நன்றி தெரிவித்து, நாமெல்லாம் ஒரே குடும்பம் எனக் கூறியுள்ளார். தற்போது, தமிழர்களிடையே நன்கு அறியப்படும் முகமாக இருக்கும் அவர், இந்த இடத்தை ஓரிரு நாட்களில் பெற்றுவிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் தனக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு, எப்படியாவது தொகுப்பாளராக மாறிவிட வேண்டும் என முயற்சி செய்துள்ளார். அது இது எது உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளுக்கு இணை இயக்குநராக பணியாற்றிய அவர், படிப்படியாக வளர்ந்து தன்னுடைய பலநாள் கனவான தொகுப்பாளர் என்ற நிலையை அடைந்தார். கலக்கப்போவது யாரு 5வது சீசனில் தொகுப்பாளராக அடியெடுத்து வைத்த அவர், அடுத்தடுத்த சீசன்களில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டார்.

ALSO READ |  அவார்டை ரிட்டர்ன் செய்த 'பிக்பாஸ்' பாலாஜி முருகதாஸ் - என்ன பிரச்சனை?

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 6 மற்றும் 7வது சீசனையும் தொகுத்து வழங்கிய அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். ரெடி ஸ்டெடி போ என்ற ரியாலிட்டி ஷோவுக்கு ரக்ஷன் தொகுப்பாளராக இருந்துள்ளார் . அண்மையில், சிறு வயதில் அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை ரக்க்ஷன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். கியூட்டாக இருக்கும் அந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து, ரக்க்ஷனை வாழ்த்தினர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Instagram, Vijay tv