Cook With Comali: குக் வித் கோமாளி பிரபலத்துக்கு நேர்ந்த விபத்து

குக் வித் கோமாளி டீம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் மணிமேகலை தான் ஒரு சிறிய விபத்தை சந்தித்ததாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சன் தொலைக்காட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. 2017-ம் ஆண்டு ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அதற்கு பின் விஜய் டிவிக்கு மாறினார்.

மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதில் தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக மணிமேகலை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் இதை படித்தேன். நன்றாக இருந்தது.

எனக்கு சிறிய விபத்து நடந்தது. ஆனால் தற்போது எல்லோரும் நலம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும், மற்ற நிகழ்ச்சிகளை ஒரு வாரமும் மிஸ் செய்வேன். எனது குழுவினரையும் மிஸ் செய்வேன். முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க” என்று தெரிவித்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Mani Megalai (@iammanimegalai)






மணிமேகலையின் இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் நலமடைந்து திரும்ப வேண்டும் என்று தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளும் பங்கேற்றனர். இவர்களில் ஒரு சிலர் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் நிகழ்ச்சிக் குழுவினரும் வைல்ட் கார்ட் மூலமாக புதிய போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் ஷிவாங்கி, புகழ் உள்ளிட்டோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: