Home /News /entertainment /

இனி பயங்கரமா இருக்கும் - பீஸ்ட் படத்தை கலாய்த்துத் தள்ளிய விஜய் டிவி குழுவினர்!

இனி பயங்கரமா இருக்கும் - பீஸ்ட் படத்தை கலாய்த்துத் தள்ளிய விஜய் டிவி குழுவினர்!

அதில் ஒரு சின்ன ஸ்க்ரீனில் ஆரஞ்சு நிற துணியை கிழித்து ராமர் வரும் காட்சிக்கு விஜய் டிவி கலைஞர்கள்

அதில் ஒரு சின்ன ஸ்க்ரீனில் ஆரஞ்சு நிற துணியை கிழித்து ராமர் வரும் காட்சிக்கு விஜய் டிவி கலைஞர்கள்

அதில் ஒரு சின்ன ஸ்க்ரீனில் ஆரஞ்சு நிற துணியை கிழித்து ராமர் வரும் காட்சிக்கு விஜய் டிவி கலைஞர்கள்

திரைப்படங்களை கலாய்ப்பது என்பது பழக்கமானது தான். தீவிர ரசிகர்கள் முதல் பொது மக்கள் வரை திரைப்படங்களை டிரோல் செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் முன்னோடி விஜய் டிவி தான். 90களில் விஜய் டிவி அறிமுகம் ஆன ஆண்டுகளிலேயே, திரைப்படங்களை கலாய்த்து எடுக்கப்படும் ஸ்பூஃப் என்ற வகையில், லொள்ளு சபா வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. லொள்ளு சபாவில் இருந்து தான் நடிகர் சந்தானம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, வித விதமாக பல்வேறு படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் விஜய் டிவி பங்கமாக டிரோல் செய்யும்.

அந்த வகையில், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக “உடன்பிறப்பே” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா புகழ் ராமர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய, பீஸ்ட் திரைப்படத்தை பயங்கரமாக கலாய்க்கும் காட்சிகள் உள்ளன.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கம் என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பையும், நடிகர் விஜய்யின் திரைப்படம் என்பது மற்றொரு பக்கம் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலாக பரவியது.

வழக்கம் போல பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் போது அதை பற்றிய ஒவ்வொரு செய்தியும் மிகவும் நுட்பமாக ஆராயப்படும். அதில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் காவி நிறத் துணியைக் கிழித்து கொண்டு சென்று வருவது போல காட்சிகள் இருந்தன. அது மட்டுமின்றி ‘பயமா இருக்கா இனிமே பயங்கரமாக இருக்கும்’ என்ற டயலாக் வைரலாக பகிரப்பட்டது. விஜய் ரசிகர்களால் பாசிட்டிவாக பகிரப்பட்ட இந்த வசனம் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு விஷயங்களையும் வைத்து ராமர் உடன்பிறப்பே நிகழ்ச்சியில் ஸ்பூஃப் செய்திருக்கும் காட்சிகள் புரோமோவில் உள்ளன.



அதில் ஒரு சின்ன ஸ்க்ரீனில் ஆரஞ்சு நிற துணியை கிழித்து ராமர் வரும் காட்சிக்கு விஜய் டிவி கலைஞர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது போல காட்சிகள் உள்ளன. அடுத்ததாக, ஒரு பனியன் அணிந்தவாறு துப்பாக்கி எடுத்துக் கொண்டு அனைவரையும் உருண்டு புரண்டு சுடும் காட்சிகளும் உள்ளன.

Read More : பீஸ்ட் விஜய்க்கு நெல்சன் செய்த சம்பவங்கள்... பாராட்டும், எதிர்மறை விமர்சனங்களும்...

இந்த நிகழ்ச்சி குறைந்தபட்சம் ஓரிரு வாரங்களுக்கு முன்னரே ஷூட் செய்யப்பட்டிருக்கும் என்ற நிலையில், இன்று வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். பீஸ்ட் திரைப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இல்லை என்பது தற்போதைய நிலவரம்.

Read More : தமிழால் இணைவோம்... சிம்பு, அனிருத் ட்வீட்டின் பின்னணி இதுதான்!

உடன்பிறப்பே நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு, விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
Published by:Elakiya J
First published:

Tags: Beast

அடுத்த செய்தி