பிரபல ஹிட் சீரியலுக்கு விரைவில் என்டு கார்டு போடப்போகும் விஜய் டிவி - ரசிகர்கள் சோகம்!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி-யில் ஏராளமான ஹிட் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

  • Share this:
வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மூலம் தமிழக மக்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது ஸ்டார் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் தோன்றிய பலரும் வெள்ளித்திரையில் மக்கள் கொண்டாடும் ஸ்டார்களாக பரிணமித்து உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் டிவி தான் என்று அவர்களே தங்கள் வாயால் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது விஜய் டிவி-யின் தனித்துவத்திற்கு உதாரணமாக இருந்து வருகிறது.

விஜய் டிவி-யில் ஏராளமான ஹிட் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சமீப ஆண்டுகளாக திரைப்படங்களின் பெயர்களை வைத்து சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

ALSO READ |  சென்னை மக்களை நம்பி வந்து ஜெயித்தேன்.. விஜய் டிவி சுனிதாவின் வெற்றி பயணம்!

கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அணைத்து முன்னணி சேனல்களும் இந்த டிரண்டை கையில் எடுத்துள்ளன. அதிலும் குறிப்பாக விஜய் டிவி-யில் பல சீரியல்கள் முன்னர் வெளி வந்த தமிழ் திரைப்படங்களின் பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான சீரியல்கள் ஹிட் பட்டியலில் இணைந்துள்ளன.

அந்த வகையில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு சீரியல் தான் ஈரமான ரோஜாவே. 2018-ம் ஆண்டு முதல் சின்னத்திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த ஈரமான ரோஜாவே சீரியல் வெகு விரைவில் முடிவடைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இந்த சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ALSO READ |  9 வருடம்... 11 பெரிய ஆபரேஷன்... புற்றுநோயுடன் போரடி மறைந்த சீரியல் நடிகை சரண்யா

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவி-யில் பல புது சீரியல்கள் துவங்க உள்ளதை வெளிப்படுத்தும் ப்ரமோ வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல் துவக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எந்த சீரியலுக்கு என்டு கார்டு போடுவார்கள்? என்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைய உள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்த தகவலை ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் நடிக்கும் நடிகை சாய் காயத்திரி சோஷியல் மீடியா மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

ALSO READ |  'நடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தேன் தெரியுமா?' நிலா சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு!

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாய் காயத்ரி சமீபத்தில் இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். இந்த ஒரே போஸ்ட்டில் 2 ஃபோட்டோ மற்றும் ஒரு வீடியோவை இணைத்துள்ளார். முதலில் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட குரூப் ஃபோட்டோவையும், இரண்டாவதாக தன்னுடன் சீரியல் குழுவினர் அனைவரும் ஈரமான ரோஜாவே என்று கூச்சலிடும் வீடியோவையும், மூன்றாவதாக குரூப் செல்ஃபியையும் ஷேர் செய்துள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)


 

இந்த போஸ்ட்டின் கேப்ஷனில், "அனைத்தும் முடிந்தது.... இன்று, ஈரமான ரோஜா ஷூட்டிங்கின் கடைசி நாள். எனது குழுவினருடன், உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன் மற்றும் உங்களை மிஸ் செய்ய போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ |  அர்ச்சனாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது - அவரே கொடுத்த அப்டேட்

இதை பார்த்த அவரது ரசிகர்கள் சீரியல் முடிய போகிறதா.? நாங்கள் உங்களையும், ஈரமான ரோஜா சீரியலையும் மிஸ் செய்ய போகிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: