Vijay TV Serial: ’சொல்லுங்க கதிர் சொல்லுங்க?’ 12 ஆம் வகுப்பு பாஸாக கதிரிடம் டிப்ஸ் கேட்கும் ‘தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகை..

கதிரிடம் டிப்ஸ் கேட்கும்‘தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகை..

12 ஆம் வகுப்பு பாஸ் செய்வது எப்படி? என பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் கதிரிடம், தமிழும் சரஸ்வதியில் நடிக்கும் நக்ஷத்திரா டிப்ஸ் கேட்டிருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் பிரபலமான தொடராக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில், அண்ணன் - தம்பிகளில் ஒருவரான கதிர் 3 மாதங்கள் கடுமையாக உழைத்து 12 ஆம் வகுப்பில் பாஸ் செய்கிறார். முதல் மதிப்பெண் பெற்ற அவரை அண்ணன் மற்றும் தம்பிகளும் இணைந்து கொண்டாடுகின்றனர். கதிரின் பேட்டியெல்லாம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானதால் ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. உன்னை படிக்க வைக்கமால் விட்டது என்னுடைய தப்பு என வருந்தும் மூத்த அண்ணன் மூர்த்தி, எப்படியாவது படிக்க வைத்திருக்க வேண்டும், மளிகை கடையில் வைத்து உன்னை வாழ்க்கையை நாசமாக்கிட்டேன் என வெதும்புகிறார்.

ஆனால், அண்ணனுக்கு ஆதரவாக பேசும் கதிர், இப்படியெல்லாம் நீங்க சங்கடப்படுவீங்கன்னு எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால் தான் உங்களிடம் எதுவும் சொல்லாமல் படித்து பாஸாகிவிட்டேன் என கூறுவதுடன், கவலைவிடுங்கண்ணே என ஆறுதல் தெரிவிக்கிறார். கதிரின் 12 தேர்ச்சி நாடகத்தில் மட்டுமல்லாது சோஷியல் மீடியாவிலும் மீம் கன்டென்டாக மாறியுள்ளது. கதிர் பாஸானதை வைத்து விஜய் டீவியில் இப்போது புதிதாக ஒளிப்பரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் நாயகியாக நடிக்கும் நக்ஷத்திராவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Photos : கெத்தான பைக்கில் அஜித்தின் ரோட் ட்ரிப் - வைரலாகும் புகைப்படங்கள்



தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடிக்கும் நக்ஷத்திரா, கதைப்படி சுமார் 8 ஆண்டுகளாக 12 ஆம் வகுப்பு பாஸ் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார். இதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் அவர், நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கல்யாணமாகி செட்டிலாகிவிடலாம் என எண்ணுகிறார். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் பரவும் கன்டென்டில், 12 ஆம் வகுப்பை 3 மாதங்களில் படித்து பாஸான கதிர், 8 வருடங்களாக போராடும் நக்ஷதிராவுக்கு டிப்ஸ் கொடுக்கலாமே என கேட்டுள்ளனர். இந்த மீம்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கதிர், நக்ஷத்திராவையும் டேக் செய்திருந்தார்.

Also Read: கையில் கத்தி..முகத்தில் இரத்தம் ’எதற்கும் துணிந்தவன்’-சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியானது..



இதற்கு பதிலளித்த நக்ஷத்திரா, 12 ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்கும் கதிர் நிச்சயம் டிப்ஸ் கொடுப்பார் என நினைக்கிறேன், சொல்லுங்க கதிர் சொல்லுங்க..! என கேட்டுள்ளார். நக்ஷத்திராவுக்கு பின்னர் பதிலளித்துள்ள கதிர், நிச்சயம் டிப்ஸ் கொடுக்காமல் இருப்பேனா? கண்டிப்பாக டிப்ஸ் கொடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். கதிரும், நக்ஷ்த்திராவும் ஒருவரையொருவர் டேக் செய்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் மெசேஜ்கள் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. கதிரின் டிப்ஸைக் கேட்டு, நக்ஷத்திரா 12 ஆம் வகுப்பு தேர்வில் பாஸ் ஆவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: