Home /News /entertainment /

தாயும், மகளும் சேர்ந்து போட்ட ஆட்டம் - வைரலாகும் சூப்பர் சிங்கர் பிரபலத்தின் இன்ஸ்டா வீடியோ.!

தாயும், மகளும் சேர்ந்து போட்ட ஆட்டம் - வைரலாகும் சூப்பர் சிங்கர் பிரபலத்தின் இன்ஸ்டா வீடியோ.!

Pragathi Guruprasad

Pragathi Guruprasad

Singer Pragathi Guruprasad | வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் இடம்பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் வித்தியாசமான ஷோக்கள், சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளிப்பார்கள். பல முன்னணி சேனல்களுக்கு மத்தியில் கலக்கலான ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சேனல் தான் ஸ்டார் விஜய் டிவி.

பல ஆண்டுகளாகவே தனித்துவமான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ளது விஜய் டிவி. சூப்பர் ஹிட் சீரியல்கள் மட்டுமின்றி மெகாஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்து தமிழக்தின் டாப் 3 சேனல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் பங்கேற்கும் பலர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பின்னர் வெள்ளித்திரையில் ஜொலிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்றாக உள்ளது. இந்த சேனலின் சாங் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கரில் பங்கேற்று வெள்ளித்திரை பாடகர்களாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளவர்கள் பலர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் பிரகதி குருபிரசாத்.  அமெரிக்க தமிழரான இவர் கடந்த 2012-ல் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து ரன்னர் அப்பாக வந்தார்.



அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே பாட்டு பாட கற்று கொண்ட இவர் விஜய் டிவி மூலம் பிரபலமானார். சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு சினிமாவிலும் பாடத் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் இவர் பாடி வருகிறார். மேலும் அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஒரு காதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

Also Read : தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தோனி… என்ன ரோல் தெரியுமா?

வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் இடம்பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார். இவரது காந்த குரல் காரணமாக ஒரு ஹீரோயினுக்கு இருக்கும் அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் மிக அதிகம். இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் பிரகதி குருபிரசாத், அடிக்கடி தனது புதிய போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்து ஃபாலோயர்ஸை மகிழ்விப்பது வழக்கம்.



 




View this post on Instagram





 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)






அப்படி சமீபத்தில் இவர் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த கலக்கல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தனது தாயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி உள்ள வீடியோவை my superstar momma என்று கேப்ஷனிட்டு தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார் பிரகதி குருபிரசாத். வித்தியாசமான மியூசிக்கிற்கு பிரகதியும், டவுசர் சட்டை அணிந்து கொண்டு அவரது தாயும் போடும் ஆட்டம் அவரது ரசிகர்கள் மத்தியிலும், சோஷியல் மீடியாக்களிலும் வைரலாகி வருகிறது. பலரும் இருவரும் க்யூட் மதர் & டாட்டர் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒரு யூஸர் உங்கள் அம்மாவின் ஹேர் ஸ்டைல் சோ கூல் என்று கூறி உள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, Trending, Vijay tv

அடுத்த செய்தி