சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீக்கு ஷூட்டிங்கில் விபத்து

சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீக்கு ஷூட்டிங்கில் விபத்து

சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ

சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் ஜூனியர், சீனியர் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு தொடர்ந்து பல சீசன்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இதற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு திரைத்துறையில் பின்னணி பாடகராக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நித்ய ஸ்ரீ ஆல்பம் ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில் அவருடன் நடிக்கும் கலைஞர்கள் அவரை மேல் நோக்கி தூக்கி போடுவது போன்றும், மேலே உள்ள கம்பியை பிடிப்பது போன்றும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது நித்ய ஸ்ரீயை மேலே தூக்கி போடும் போது அவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

அந்தக் காட்சிகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு அதுகுறித்து எழுதியிருக்கும் நித்ய ஸ்ரீ, “படப்பிடிப்பில் எவ்வளவு கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படாமல் கலைஞர்கள் தங்களுடைய உழைப்பை கொட்டி வருகின்றனர். ஒரு சிறிய விபத்துக்கே எனக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஸ்டண்ட் கலைஞர்கள் தினமும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். அதை நினைக்கும்போதே பிரமிப்பாக உள்ளது. அவர்களுக்கு என்னுடைய சல்யூட். 
View this post on Instagram

 

A post shared by Nithyashree (@_nithyashree)


ஒவ்வொரு கலைஞர்களும் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் திரும்பி வந்து தங்களுடைய இலக்கை அடைவதை மட்டுமே குறிக்கோளாக இருக்கின்றனர். அதுபோல் தான் நானும்” என நீண்ட பதிவை எழுதியுள்ளார் நித்யஸ்ரீ.
Published by:Sheik Hanifah
First published: