விஜய் டிவி வில்லிகள் மோதல்; இன்ஸ்டாகிராமில் பரவும் வீடியோ

வெண்பா

ராஜா ராணி சீரியல் வில்லியான அர்ச்சனாவின் கன்னத்தில், பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா அறையும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரஜா ராணி 2, பாரதி கண்ணம்மா சீரியல்கள் இரண்டும் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியல்களாக இருக்கின்றன. கொரோனா காரணமாக தமிழ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த சீரியல்களின் காட்சிகள் படமாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வித்தியாசமாக யோசித்த சேனல் நிர்வாகம், இரண்டு சீரியல்களையும் ஒன்றாக மாற்றியுள்ளது. அதாவது மெகா சங்கமம் என்ற பெயரில் இரண்டு சீரியல் நடிகர்களும் சந்தித்துக் கொள்ளும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

  இதற்காக பிரத்யேகமாக ஒரு ரிசார்டில் தங்கியிருக்கும் இரண்டு சீரியல் குடும்பத்தினரும், அங்கேயே இருந்தவாறு சூட்டிங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்டோர் சூட்டிங் என்பதால், பிரச்சனையில்லாமல் சூட்டிங் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையுடன் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு கதைக்களும் ஒரு புள்ளியில் சந்தித்தால், ஏற்படும் உணர்ச்சிகளை பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப இயக்குநர்கள் படம்பிடித்து வருகின்றனர். இதற்கிடையே, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவும், ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தை பட்டைய கிளப்பி வருகிறது.

  அவர்கள் இருவரும் சீரியலில் மோதிக்கொள்ளவில்லை. இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டுள்ளனர். இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனாவின் கண்ணத்தில் பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா ஓங்கி அடிக்கிறார். இதில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால், சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அவை இல்லை. இருவரும் சேர்ந்து டைம் பாஸூக்காக இன்ஸ்டாகிராம் ரீலை உருவாக்கியுள்ளனர்.

  நடிப்பு சூறாவளிகளான இருவரும், வில்லிக்கான வில்லத்தனத்தை கொஞ்சமும் மாறாமல் ரீலில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அண்மைக்காலமாக விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்து வருகின்றனர் என்றே கூறலாம். குக் வித் கோமாளியில் கிடைத்த புகழ் மூலம் பாலா, புகழ், சிவாங்கி ஆகியோர் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். மா.கா.பா ஆனந்த், பிரியங்கா, ஈரோடு மகேஷ் ஆகியோர் இன்ஸ்டாவில் அவ்வப்போது ஜி.பி முத்துவுடன் உரையாடுகின்றனர். ரக்ஷனுக்கு அண்மையில் 2 மில்லியன் பின் தொடர்பாளர்கள் கிடைத்தனர். தற்போது அந்தப் பட்டியலில் ஜாக்குலினும் இணைந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதேபோல், சூப்பர் சிங்கர் போட்டியாளர்களான ஐய்யனார், ஷாம் விஷால் உள்ளிட்டோரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். தங்களின் தனித்திறமையை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர். பரத் தனது தம்பியுடன் இணைந்து பாடல் மட்டுமல்லாமல் காமெடி பர்பாம்ன்ஸூம் கொடுத்து வருகிறார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: