ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாதியில் நிறுத்தப்பட்ட விஜய் டிவி சீரியல் மீண்டும் வருகிறது.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

பாதியில் நிறுத்தப்பட்ட விஜய் டிவி சீரியல் மீண்டும் வருகிறது.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

செந்தூரப் பூவே சீரியலின் நாயகி ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

செந்தூரப் பூவே சீரியலின் நாயகி ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

செந்தூரப் பூவே சீரியலின் நாயகி ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு சேனல் என்றால் அது விஜய் டிவி என்று சொல்லலாம். அதேபோல, சீரியல்களுக்கு பஞ்சம் இல்லாமல் ஓடும் . சன் டிவி-க்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவி-யும் பல சீரியல்களை கொண்டுவந்தது. தற்போது, காலையில் தொடங்கி இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன. அதில் பல ஹிட் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக டிஆர்பி வரிசையில் எப்போதும் சன் டிவி சீரியல்களும், விஜய் டிவி சீரியல்களும் போட்டிபோட்டுக் கொண்டு முன்னிலை வகிக்கும்.

அந்த வகையில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பல ஹிட் சீரியல்களில் செந்தூர பூவே சீரியலும் ஒன்று. நடிகர் ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் முதன் முறையாக என்ட்ரி கொடுத்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வந்தார். யமுனா சின்னதுரை, சாந்தி வில்லியம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்தனர். இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றது.

இதையும் படிங்க.. Amir : பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல சீரியல் ஆரம்பமானதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியலாக மாறியது. இந்த தொடர் 200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் சமீபத்தில் ரஞ்சித்தின் நிஜ மனைவியான ப்ரியா ராமன் இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல விறுவிறுப்பான திருப்பங்களோடு ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது.


இதனுடன் சேர்த்து மற்றொரு சீரியலும் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சில மாதங்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை அடுத்து சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக விஜய் டிவியும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தையே தந்தது. பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கியதும் நிறைய சீரியல்களின் நேரம் மாற்றம் ஆனது. தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விரைவில் இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருப்பதால், செந்தூரப்பூவே சீரியல் மீண்டும் ஜனவரி மாதம் ஒளிபரப்பை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

அதன்படி, தற்போது இந்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீரியலின் நாயகி ஸ்ரீநிதியின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதில் நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளதா இல்லை அதே நடிகர்கள் தான் நடிக்கிறார்களா என்பது உறுதிபட தெரியவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: