• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அம்மாவான விஜய் டிவி சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துகள்!

அம்மாவான விஜய் டிவி சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துகள்!

ஸ்வேதா வெங்கட்

ஸ்வேதா வெங்கட்

ஸ்வேதாவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

  • Share this:
    விஜய் டிவி சீரியல் பிரபலம் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

    டிவி தொகுப்பாளினியாகி சீரியல் நடிகையானவர் ஸ்வேதா வெங்கட். வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான, ’சின்னத்தம்பி’, ‘பொன்மகள் வந்தாள்’, சன் டிவி-யின் தாமரை சீரியல்களிலும் நடித்திருந்தார் ஸ்வேதா.



     




    View this post on Instagram





     

    A post shared by swetha Venkat (@swethavenkat.v)






    சீரியல்களிலும் மட்டுமில்லாமல் ’கவண்’, ’தப்புதாண்டா’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். ஸ்வேதாவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் நடித்து வந்த நிலையில் கடந்தாண்டு கர்ப்பமானார். இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் தெரியப்படுத்தியுள்ளார் ஸ்வேதா.

    கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து, "ஃபைனலி நான் ஜெயித்து விட்டேன். ஆம் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ஸ்வேதா வெங்கட்டுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: