Vijay TV Serial Actress : செம்ம மாடர்ன் லுக்கில் போட்டோஸ் பதிவிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை..

ப்ரியங்கா குமார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியங்கா குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

  • Share this:
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியலில் வெண்ணிலா என்ற லீடிங் ரோலில் நடித்து வருபவர் தான் பிரியங்கா குமார். தனது வாழ்க்கையில் படித்து பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைக்கும் வெண்ணிலாக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் தந்தை. இதனால், தனது ஆசிரியர் உதயவியுடன் வீட்டில் இருந்து வெளியேறி சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்கிறார்.

அங்கு அவர் படிப்பு செலவுக்காக வேலை செய்து, பல்வேறு சிக்கலைகளை சமாளித்து வருவது போல கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி கால கதையாக அமைந்திருப்பதால் இந்த சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த சீரியலில் ஆசிரியராக சூர்ய தர்ஷன் நடித்து வருகிறார்.



பிரியங்கா குமார் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார்.



மேலும் இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படிப்பில் சேர்ந்தார். கடந்த 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு, கன்னட சின்னத்திரையில் சில சீரியல்களில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். ஸ்டார் ஸ்வர்ணா சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி தொடரில் துளசி கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.

Also Read : பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை சாய் பல்லவி வீட்டில் விஷேசமா ? - ஃபேமிலி போட்டோஸ்



பிறகு கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான ராதா ரமணா தொடரில் பிங்க்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னட மக்களின் இதயத்தில் இடம்பிடிக்க தொடங்கிய பிரியங்காவுக்கு சன்டிவி-யில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. உடனே ஓகே சொல்லிய அவர், சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார். அந்த தொடரில் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார்.

Also Read : 'இது நடிப்பு இல்லை..ரியல்' - வெளியான சன் டிவி சீரியல் நடிகையின் திருமண வீடியோ..



பிரியங்காவின் நடிப்புக்கு தமிழில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி நல்ல டிஆர்பியில் சென்றுகொண்டிருந்த சீரியல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு மீண்டும் விஜய் டிவி மூலம் தமிழில் என்ட்ரி ஆக மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

 




நடிப்பு, மாடலிங் தவிர்த்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் சமீபத்தில் மாடர்ன் லுக்கில் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சீரியலில் கல்லூரி பெண்ணாக ஹோம்லி லுக்கில் வரும் இவர், தனது மாடர்ன் லுக்கால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: