Home /News /entertainment /

முடிவுக்கு வருகிறதா ‘குக் வித் கோமாளி சீசன் 3’ - வின்னர் யார் தெரியுமா.?

முடிவுக்கு வருகிறதா ‘குக் வித் கோமாளி சீசன் 3’ - வின்னர் யார் தெரியுமா.?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

Cooku With Comali Season 3 | மேலும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ‘பேட்ட’, ’சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களில் நடித்த முத்துக்குமாரும், சின்னத்திரை பிரபலமான சுட்டி அரவிந்தும் பங்கேற்றுள்ளனர்.

விஜய், ஜீ தமிழ், கலர்ஸ், சன், என அனைத்து சேனல்களும் போட்டி, போட்டுக்கொண்டு ரசிகர்களை கவர்வதற்காக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகின்றன. ரியாலிட்டி ஷோக்களுக்கென்றே மிகவும் புகழ் பெற்ற தமிழ் சேனல் ஸ்டார் விஜய் டிவி தான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். சூப்பர் சிங்கரில் துவங்கி நீயா நானா, கலக்க போவது யாரு, அது இது எது, கிங்க்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், சூப்பர்ஸ்டார் சிங்கர், ஜோடி ஃபன் அன்லிமிட்டட், பிக்பாஸ், மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை, பிக்பாஸ் ஜோடிகள் என மிக நீளமான பட்டியல் இருக்கிறது.

அதில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னி பெடலெடுக்கும் ஷோவாக வலம் வருகிறது. இதன் முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, சுனிதா, சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ‘பேட்ட’, ’சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களில் நடித்த முத்துக்குமாரும், சின்னத்திரை பிரபலமான சுட்டி அரவிந்தும் பங்கேற்றுள்ளனர். சமையலையும், காமெடியையும் கலந்து கட்டி, புதுப்புது டாஸ்குடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read : இது தப்பே இல்ல! ஆண்ட்ரியா பகிர்ந்த அந்த புகைப்படம்..

தற்போது விஜய் தொலைக்காட்சி இந்த வார நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரத்திற்கு போட்டியாளர்களுக்குள் ‘அன்யூஸ்வல் இன்கிரிடியன்ஸ்’ என்ற சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது வித்தியாசமான இரண்டு பொருட்களை வைத்து ஒரு மெனுவை தயாரிக்க வேண்டும்.



போதாக்குறைக்கு மயில் தோகையை வேறு போட்டியாளர்களுக்கு மாட்டிவிட்டார்கள். அவர்கள் அத்துடன் அசைந்து ஆடிக்கொண்டு தான் கோமாளிகளுக்கு எந்த ஒரு கட்டளையும் கொடுக்க வேண்டுமாம். இந்த வீடியோவில் கிரேஸ் கருணாஸ், தர்ஷன், அதில், கிராஸ் கருணாஸ், அம்மு அபிராமி ஆகிய ஒருவருடைய டிஷ்ஷை சுவைத்த செஃப் வெங்கடேஷ் பட், 'நீங்க மட்டும் இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு சமைத்திருந்தால், நீங்க தான் டைட்டில் வின்னர்' என்று கூறுகிறார். ஆனால் மூன்று பேரில் யார் அப்படி ஒரு அசத்தலான டிஷ்ஷை சமைத்தார்கள் என தெரியவில்லை. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக வெளியாகியுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, Vijay tv

அடுத்த செய்தி