Home /News /entertainment /

அம்மா, தம்பியுடன் சேர்ந்து நடனமாடிய விஜய் டிவி பிரியங்கா...வைரல் வீடியோ!

அம்மா, தம்பியுடன் சேர்ந்து நடனமாடிய விஜய் டிவி பிரியங்கா...வைரல் வீடியோ!

விஜய் டிவி பிரியங்கா வைரல் வீடியோ!

விஜய் டிவி பிரியங்கா வைரல் வீடியோ!

Anchor Piriyanka | டிடி என்கிற திவ்ய தர்ஷினிக்கு பிறகு விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராகவும், விஜய் டெலிவிஷனின் முகமாகவும் உலா வரும் பிரியங்கா தேஷ்பாண்டே.

டிடி என்கிற திவ்ய தர்ஷினிக்கு பிறகு விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராகவும், விஜய் டெலிவிஷனின் முகமாகவும் உலா வரும் பிரியங்கா தேஷ்பாண்டே பற்றி பெரிய அளவிலான அறிமுகமே தேவைப்படாது.

சினிமா காரம் காபி, ஒல்லிபெல்லி, கலக்கப்போவது யாரு போன்ற விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பதற்கு முன்னதாக பிரியங்கா ஜீ தமிழ், சுட்டி டிவி, சன் மியூசிக் மற்றும் சன் டிவி ஆகிய சேனல்களிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பது நாம் பலரும் அறியாத ஒரு விசயம் ஆகும். அறியாதோர்களுக்கு ஜீ தமிழில் திஸ் சிற்பி கேர்ள், அழகிய பெண்ணே, இசை அன்ப்ளெக்ட்டு போன்ற நிகழ்ச்சிகளையும், சுட்டி டிவியில் டாடி மை ஹீரோ, சன் மியூசிக்கில் மாமீஸ் டேஅவுட் மற்றும் சன் டிவியில் சூரிய வணக்கம் போன்ற நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி உள்ளார்.

ஆனால் தற்போது பிரியங்கா என்றால் விஜய் டிவி; விஜய் டிவி என்றால் பிரியங்கா என்றாகி விட்டது; பார்வையாளர்கள், அவ்வளவு ஏன் போட்டியாளர்கள் இல்லாமல் கூட ஒரு விஜய் டிவி ஷோ நடக்கலாம் ஆனால் பிரியங்கா இல்லாமல் நடக்காது என்கிற அளவிற்கு கலக்கி வருகிறார்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சூப்பர் சிங்கரில் தொகுப்பாளராகத் தோன்றியதன் மூலம், கடந்த 2016 ஆம் ஆண்டில் சிறந்த பெண் தொகுப்பாளருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதை பெற்றுள்ள ப்ரியங்கா, 2017 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருதுகள் விழாவில் சிறந்த பெண் தொகுப்பாளர் விருது, 2018 ஆம் ஆண்டில் கலாட்டா நட்சத்திர டிவி-பிலிம் விருதுகளில் சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விருது என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே பரிந்துரைப் பிரிவின் கீழ் மூன்று முறை விருதுகளை வென்று உள்ளார்.

Read More : பல போராட்டங்களுக்கு பிறகு கல்யாணம்.. சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!


மேலும் தனது யூட்யூப் சேனலின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டில் பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள் விழாவில் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரம் என்கிற விருதையும் பிரியங்கா பெற்று உள்ளார். இப்படி பிரியங்காவின் கேரியரில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது - அவர் பிக் பாஸ் சீசன் 5 வீட்டிற்குள் நுழையும் வரை!

குறிப்பிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, பிரியங்கா தனது இமேஜை 'செல்ஃப்-டேமேஜ்' செய்துகொண்டார் என்பதே நிதர்சனம். பிபி வீட்டிற்குள்ளே தனது உண்மையான முகங்களை வெளிப்படுத்தி விட்டு, வெளிய வந்த பிறகு அவர் செய்யும் எந்தவொரு க்யூட் ஆன விசயமும், எந்தவொரு ஃபன்னியான செயலும் பெரிதும் ரசிக்கும்படி இல்லை என்பது, சில முன்னாள் பிரியங்கா ரசிகர்களின் கருத்து. இருந்தாலும் பிரியங்கா தனது முயற்சிகளை கைவிடுவதாய் இல்லை.
 

தற்போது, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தன் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் பிரியங்கா, அவரது அம்மா மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் சுற்றி சுற்றி டான்ஸ் ஆடுகிறார்கள். அதற்கு ஏன் லைக் போடுகிறோம்.. எதற்கு லைக் போடுகிறோம் என்று தெரியாத ரசிகர்கள் குறிப்பிட்ட வீடியோவை தெறிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்!

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Anchor Priyanka, Trending, Vijay tv, Viral

அடுத்த செய்தி