பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரியலில் குட்டியானையில் பயணித்த குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முதலில் இருந்தே குட்டியானை ஆட்டோவில் வெளியே செல்வதை பிடிக்காத ஜீவாவின் மனைவி மீனா,’ நான் அந்த வண்டியில வரமாட்டேன், எல்லோரும் என்னை பார்த்து சிரிப்பாங்க’ எனக் கூறுகிறாள்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்ணன் தம்பி பாசத்தை திரைக்கதையாக கொண்டு நகர்கிறது. அதில் மூர்த்தியின் தம்பியான ஜீவா, இரவு முழுவதும் கண்விழித்து கடைக்காக வாங்கிய குட்டியானையை தயார் செய்கிறார். வெளியில் செல்வதற்காக அவர் தயார் செய்த குட்டியானை ஆட்டோவைப் பார்த்து கதிர், தனம் உள்ளிட்டோர் பாராட்டும்போது, ஜீவா மனைவியான மீனாவுக்கு மட்டும் பிடிக்கவில்லை. குட்டியானையில் வெளியில் செல்ல பிடிக்காத மீனா, இதை சுத்திவேற நின்னு வேடிக்கை பார்க்குறாங்க என திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுகிறாள்.

கதிரின் மனைவியான முல்லைக்கும் ஆட்டோவில் செல்ல பிடிக்கவில்லை. வண்டி உனக்கு பிடிக்கவில்லையா? என கதிர் கேட்கும்போது பேசும் முல்லை, கடை வேலைக்காக வாங்கிய வண்டியிலயா வெளியில் போகிறோம் எனக் கேட்டு கோபமடைகிறார். ஆனால், வெளியில் செல்வதற்காக அண்ணன் ஜீவா தயார் செய்ததை விட்டுக்கொடுக்காமல் பேசும் கதிர், ‘ இரவு முழுவதும் கண்விழித்து அண்ணன் தயார் செய்தது, நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லு என கேட்கிறான். அதற்கு ‘வண்டி ரொம்ப சூப்பரா இருக்கு’ என முல்லை ஜீவாவிடம் சொல்கிறாள்.

Also read:   பிகில் படத்தை போட்டுக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.. சென்னை அரசு மருத்துவமனையில் ருசிகர சம்பவம்

பின்னர், இந்த வண்டிய அண்ணன் நைட் புல்லா ரெடி பண்ணிருக்கு, உடனே வண்டியில கடை சாமான் ஏத்தினால், அதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும், அதனால எல்லோரும் ஒருமுறை வெளியே போய்டுவருவோம் என கதிர் கூறுகிறான். அண்ணன் மூர்த்தி, உடனே எப்படிடா கிளம்ப முடியும்? என கேட்கிறார். முல்லையும், வீட்டில் நெறைய வேலை இருக்கு என சொல்ல, மூர்த்தியின் மனைவியான தனம் பக்கத்துல எங்கயாவது போய்டு உடனே வந்திடலாம் என சொல்கிறாள். அவளின் யோசனைக்கு மூர்த்தியும் ஓகே சொல்கிறார்.

ஆனால், முதலில் இருந்தே குட்டியானை ஆட்டோவில் வெளியே செல்வதை பிடிக்காத ஜீவாவின் மனைவி மீனா,’ நான் அந்த வண்டியில வரமாட்டேன், எல்லோரும் என்னை பார்த்து சிரிப்பாங்க’ எனக் கூறுகிறாள். அவளை ஜீவா சமாதானம் செய்தவுடன் வெளியில் செல்வதற்கு ஒப்புக்கொண்டு கிளம்புகிறாள். மற்றொரு புறத்தில் கதிர், தன் மனைவி முல்லையிடம் ‘ இந்த வண்டியில வர்றது உனக்கு பிடிக்கலையா? என கேட்க, அவளோ ’ எல்லோரும் வர்றாங்க இல்ல, நானும் வர்றேனு சொல்கிறாள். அதற்கு கதிர், ‘அண்ணனுக்காக போய்ட்டு வருவோம்’ என கூறுகிறான்.

Also read:    6 வயது சிறுமியை 3 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒருவழியாக அனைவரும் ஆட்டோவில் வெளியே கிளம்புகின்றனர். வண்டியில் இருக்கும்போது மீனாவும், முல்லையும் முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டே செல்கிறார்கள். மீனாவின் முகத்தை பார்த்த மூத்த அண்ணன் மூர்த்தி, தன் மனதில் பட்டத்தை பட்டவர்த்தனமாக பேசுகிறார். ’ இந்த வண்டியில வர்றதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் புடிக்கல. இப்போ நம்மகிட்ட கார் வாங்குற அளவுக்கு பணம் இல்லை. அதுவும் இல்லாம நம்ம வீட்ல இப்போ செலவு எல்லாம் அதிகம் ஆகிட்டே இருக்கு. நம்ம கயல் பாப்பா வளர்ந்துட்டே இருக்கே. இன்னொரு பாப்பா வேற சீக்கிரம் வர போகுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவுங்கள எல்லாம் நல்லா பார்த்துக்கணும்ல. நம்மளும் ஒருநாள் கார் வாங்குவோம்பா’ என சொல்கிறார். அவர் விளக்கத்தை எடுத்துக்கூறியதும் மீனா சமாதானம் அடைகிறாள். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்புகின்றனர். அதன்பின்னர், தனம் வளைகாப்பு பற்றி பேசுவதற்காக ஜெகா குடும்பத்துடன் மூர்த்தி வீட்டுக்கு வருகிறான். அத்துடன் எபிசோடு நிறைவு பெற்றிருக்கிறது.
Published by:Arun
First published: