பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக இணைந்த நடிகை - வெடிக்கும் பிரச்னை

பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக இணைந்த நடிகை - வெடிக்கும் பிரச்னை

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவின் அத்தை கதாபாத்திரம் சேர்க்கப்பட்டிருப்பதால் இனி வீட்டில் புதிய பிரச்னைகள் கிளம்பும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை அமைக்கப்பட்டிருப்பதால் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.

சுஜிதா, ஸ்டாலின், குமரன், ஹேமா உள்ளிட்ட இத்தொடரில் நடித்துவரும் நடிகர்களுக்கென தனித்தனியே ரசிகர்கள் கூட்டமிருக்கிறது. இத்தொடரில் மிகவும் பிரபலமான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: மாஸ்டர் பாக்ஸ் ஆஃபிஸ் - இந்திய அளவில் வரவேற்பைப் பெற்ற விஜய் படம்!

இதையடுத்து பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி சித்ராவுக்கு பதிலாக முல்லையாக நடிக்க புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது மீனாவின் அத்தை ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஒருவர் இணைந்துள்ளார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்குள் வந்திருப்பதால் புதிய பிரச்னைகள் எழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே வீட்டில் கழிவறை கட்டும் பிரச்னை முடிந்திருக்கும் நிலையில் அடுத்ததாக கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்க ராசாத்தி கதாபாத்திரம் வியூகம் அமைக்கும் என தெரிகிறது. எனவே வரும் நாட்களில் கதை எப்படி நகரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published:

சிறந்த கதைகள்