பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் இணைந்த புதிய முல்லை - வைரலாகும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் இணைந்த புதிய முல்லை - வைரலாகும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுக்குப் பிறகு முல்லை கேரக்டரில் நடிப்பவருக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சுஜிதா, ஸ்டாலின், குமரன், ஹேமா உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடித்து வருகின்றனர். அதில் மிகவும் பிரபலமான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த 9-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சித்ரா தற்கொலையை ஜீரணிக்க முடியாத பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் முல்லை கேரக்டரில் வேறு யாரையும் நடிக்க வைக்க வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை காவியா அறிவுமணி ஒப்பந்தமானார். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கேரக்டருக்கு அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீவித்யா சில புகைப்படங்களை பதிவிட்டு அதை உறுதி செய்துள்ளார்.மேலும் இதுகுறித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டிருக்கும் ஸ்ரீவித்யா, “பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காவ்யா தான் முல்லையாக நடிக்கிறார். அவருக்கு இது ஒரு சவாலான காரியம் தான். ரசிகர்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ராவுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை ஸ்ரீவித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: