பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனையில் அனுமதி

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனையில் அனுமதி

பாண்டியன் ஸ்டோர்ஸ்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் நடிகை மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018-ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், விஜே சித்ரா, சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தொடரின் கதை கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதால் கிராமங்களிலும், நகரங்களிலும் இத்தொடருக்கு பார்வையாளர்கள் அதிகம். அதேபோல் இத்தொடரில் நடிக்கும் கதிர் - முல்லை, தனம் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இத்தொடரில் சமீபத்தில் இணைந்தவர் நடிகை கவுசல்யா செந்தாமரை. கதைப்படி மீனா கதாபாத்திரத்துக்கு பாட்டியாக நடித்து வருகிறார். இதற்கு முன்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 74 வயதாகும் இவர் திடீரென மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நடிகை கவுசல்யா செந்தாமரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கவுசல்யா செந்தாமரை மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவியாவார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உடன் ‘திருடாதே’ படத்தில் நடித்திருக்கும் இவர் ‘வயசு பசங்க’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: