பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இது புதுசு... தமிழ் தொடருக்கு கிடைத்த பெருமை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இது புதுசு... தமிழ் தொடருக்கு கிடைத்த பெருமை

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு டிவி தொடருக்கும் கிடைக்காத பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை அமைக்கப்பட்டிருப்பதால் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.

சுஜிதா, ஸ்டாலின், குமரன், ஹேமா உள்ளிட்ட இத்தொடரில் நடித்துவரும் நடிகர்களுக்கென தனித்தனியே ரசிகர்கள் கூட்டமிருக்கிறது. இத்தொடரில் மிகவும் பிரபலமான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த 9-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி சித்ராவுக்கு பதிலாக முல்லையாக நடிக்க புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடரின் இந்தி ரீமேக் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான ப்ரமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இந்திக்கு ரீமேக் செய்யப்படுவது சின்னத்திரை உலகில் பெருமையாக பார்க்கப்படுகிறது.



தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: