ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் மாயன் பற்றி பரவிய திடீர் வதந்தி... ஆனால் உண்மை இதுதான்!

விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் மாயன் பற்றி பரவிய திடீர் வதந்தி... ஆனால் உண்மை இதுதான்!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகரும், ஆர்ஜே-வுமான மிர்ச்சி செந்தில் விலக உள்ளதாக தகவல் வெளியானது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகரும், ஆர்ஜே-வுமான மிர்ச்சி செந்தில் விலக உள்ளதாக தகவல் வெளியானது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகரும், ஆர்ஜே-வுமான மிர்ச்சி செந்தில் விலக உள்ளதாக தகவல் வெளியானது.

  • 2 minute read
  • Last Updated :

பிரபல தமிழ் சேனல்கள் அனைத்திலும் தவறாமல் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ஒன்று சீரியல்கள். காமெடி ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டாலும் கூட சீரியலுக்கென்று இருக்கும் ரசிகர் வட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை. எனவே முக்கிய சேனல்கள் அனைத்துமே தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்ள சீரியல்களை தான் முக்கிய கருவியாக பயன்படுத்தி வருகின்றன. காதல், சோகம், குடும்பம் என்று ஒரே ட்ராக்கில் சென்று கொண்டிருந்த சீரியல்களை கலர்ஃபுல் மற்றும் யூத்ஃபுல் ட்ராக்கில் எடுத்து சென்று அனைத்து வயது ஆடியன்ஸ்களையும் சீரியல்களை பார்க்க வைத்ததில் முன்னணியில் இருக்கும் ஸ்டார் விஜய் டிவி-யின் பங்கு அதிகம்.

வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை கலைஞர்களை பிரபலப்படுத்துவதிலும் விஜய் டிவி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ராஜபார்வை, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, காற்றுக்கென்ன வேலி, மெளனராகம், தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல விறுவிறுப்பான கதையமச்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது விஜய் டிவி.

இதில் மாலை 6.30 முதல் 7 மணி வரை டெலிகாஸ்ட் செய்யப்படும் ஹிட் சீரியல் தான் ’நாம் இருவர் நமக்கு இருவர்.’ 2018-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை இந்த சீரியல் பெற்றதால், இரண்டாம் சீசன் மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை முதல் துவங்கி தற்போது வரை ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் சீசனில் நடித்த சரவணன் - மீனாட்சி சீரியல் பிரபலம் செந்தில் தான் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-ல் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படு சுவாரசியமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து நடிகரும், ஆர்ஜே-வுமான மிர்ச்சி செந்தில் விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சின்னத்திரை ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும், ஜீ தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஷோவில் ஜட்ஜ்-ஜாக மிர்ச்சி செந்தில் பங்கேற்க உள்ளதாகவும், அதே நேரத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிப்பை தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட குறிப்பிட்ட சீரியலின் தீவிர ரசிகர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: