'சீக்கிரம் வருகிறோம்’..மௌனராகம் 2 சீரியல் அப்டேட் - சொன்னது யார் தெரியுமா?

மௌன ராகம்

கொரோனா வைரஸ் பரவலால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த மௌனராகம் 2 சீரியல் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மௌனராகம் 2 சீரியல் உருவானது. இந்த சீரியலில் சக்தி, வேலன் கதாபாத்திரங்களில் கிருத்திகா நடிக்கிறார். ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தாய் செல்வம் தொடரை இயக்குகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் பரவிய கொரோனா வைரஸ் 2வது அலையால் தளர்வுகள் இல்லா ஊரங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சின்னத்திரை, வெள்ளித்திரை சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டன. விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் 2 பாகத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. சன்டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் மட்டும் கதைகளத்துக்கு ஏற்பட இன்டோர் சூட்டிங்குகள் நடத்தப்பட்டது. ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கும் என முன்பே கணித்த சில சீரியல் தொடர் குழுவினர், சூட்டிங் ஸ்பாட்டை ஹைதராபாத்துக்கு மாற்றினர். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் எந்த வித அச்சறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பான சூட்டிங் நடத்தினர்.

இதனிடையே, தமிழகத்திலும் கொரோனா வைரஸ் மெல்ல குறையத் தொடங்கியதையடுத்து முன்னணி சீரியல்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக தொடங்கி, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பைத் தொடங்கினர். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் 2 தொடர்பான எந்த அப்பேட்டும் ரசிகர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. மௌனராகம் 2 ஒளிபரப்பான நேரத்தில் பாவம் கணேசன் சீரியல் ஒளிபரபாகியது. இதனால், மௌன ராகம் 2 சீரியல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது.

  
View this post on Instagram

 

A post shared by _vijaytv_stars (@_vijaytv_stars)

இதற்கு அண்மையில் விளக்கம் கொடுத்த சீரியல் குழுவினர், மௌனராகம் 2 தொடர் மீண்டும் வரும் எனக் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பால் தங்களால் சூட்டிங் நடத்த முடியவில்லை எனக் கூறிய குழுவினர், ஏற்கனவே எடுத்துவைத்திருந்த அனைத்து பாகங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிட்டதாக கூறினர். கைவசம் பேக்கப் இல்லாததால், மௌனராகம் 2 சீரியல் ஒளிபரப்பாகவில்லை என்றும், விரைவில் சூட்டிங் தொடங்கும் என்றும் விளக்கம் கொடுத்திருந்தனர். ரசிகர்கள் அதே எதிர்பார்ப்புடன் காத்திருக்குமாறும் கூறினர். இந்நிலையில், மௌனராகம் 2 சீரியல் சூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான அப்டேட்டை சீரியலில் தருண் - வருண் கதாப்பாதிரங்களில் நடிக்கும் நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், " We are coming Back soon" என அந்த வீடியோவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் ஸ்டார்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: