• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெர்சனல் விஷயத்தை காமெடியாக்கிய விஜய் டிவி - கடுப்பான வனிதா விஜயகுமார்

பெர்சனல் விஷயத்தை காமெடியாக்கிய விஜய் டிவி - கடுப்பான வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா

நடிகை வனிதா

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களை விஜய் டிவியில் காமெடியாக மாற்றியிருப்பதால் கடுப்பாகியுள்ளார் வனிதா விஜயகுமார்.

  • Share this:
சர்ச்சைகளை தவிர்த்தாலும் அவை ஒருவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது வனிதா விஜயகுமார் தான். கடந்த ஜூன் மாதத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட வனிதா, சமீபத்தில் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாட சென்ற போது அங்கு ஏற்பட்ட பிரச்னையால் பீட்டர் பாலை விட்டு விலகினார்.

அதற்கு காரணமாக அவர் அதிகம் மது அருந்துவதாகவும், புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் உருக்கமாக விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் விஜய் டிவியில் வனிதா கலந்து கொண்டிருக்கும் ‘கலக்கப்போவது யாரு’ காமெடி நிகழ்ச்சியில் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தவற்றை காமெடி கண்டென்ட்டாக மாற்றியுள்ளனர் நிகழ்ச்சிக்குழுவினர்.

மேலும் படிக்க: சிம்புவுக்கு நன்றி சொன்ன நடிகை ஹன்சிகா!

அதுகுறித்த புரமோ வீடியோ ஒன்றையும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. அதில் வனிதாவிடம் கேள்வி எழுப்பும் ஈரோடு மகேஷ், கவுன்டர் அடிக்கும் கலக்கப்போவது யாரு பாலா ஆகியோரிடம் உங்களிடம் கன்டென்ட் இல்லையா? இதுதான் உங்களுக்கு காமெடியா என்று கடுமையாக சாடியுள்ளார் வனிதா விஜயகுமார்.

வீடியோ:



வனிதாவின் தனிப்பட்ட விஷயத்தையும் காமெடியாக்கி காசு பார்ப்பதாக விஜய் டிவி மீது நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: