உற்சாகத்தில் நடிகை ஜாக்குலின்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டாட்டம்

ஜாக்குலின்

பொதுவாக ஆங்கரிங் செய்ய நல்ல குரல்வளம் கொண்டவரை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் முதல் முறையாக இந்த பிம்பத்தை உடைத்தெறிந்தவர் ஜாக்குலின்.

 • Share this:
  விஜய் டிவி புகழ் நடிகை ஜாக்குலின் லிடியா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார் நடிகை ஜாக்குலின். ஸ்டார் விஜய் டிவி-யில் கலக்க போவது யாரு உள்ளிட்ட சில பிரதான நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின் லிடியா. பொதுவாக ஆங்கரிங் செய்ய நல்ல குரல்வளம் கொண்டவரை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் முதல் முறையாக இந்த பிம்பத்தை உடைத்தெறிந்து தன்னாலும் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் இவர். ஏனென்றால் இயல்பிலேயே இவரது குரல் வளம் சற்று கிரீச்சென்று இருக்கும். 1996ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

  விஜய் டிவி-யில் ஆங்கராகும் முன் அதிலேயே ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் மற்றும் கனா காணும் காலங்கள் உள்ளிட்ட ஹிட் சீரியலிகளில் நடித்திருந்தார். கடந்த 2014-ல் கலக்க போவது யாரு சீசன்-5 நிகழ்ச்சிக்காக புதிய ஆங்க்கரை தேர்வு செய்ய நடத்தப்பட்ட ஆடிஷனில் பங்கேற்ற ஜாக்குலின், முதல் 10 பேரில் ஒருவராக வந்தார். ரக்ஷனுடன் இணைந்து இருவரும் 2 சீசன்களில் ஆங்க்கராக வந்தனர். பின்னர் தனது வெள்ளித்திரை பயணத்தை துவக்கினார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். ஜாக்குலின் நடித்து வரும் இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவரது ரசிகர்களின் வட்டமும் பெருகி உள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by Jacquline Lydia (@me_jackline)


  இந்நிலையில் எப்போதும் ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜாக்குலின், தனது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அப்டேட்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வார். இதனிடையே இன்ஸ்டாவில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளார். கொண்டாட்டத்தின் சில மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக பதிவு செய்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இன்ஸ்டாவில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் என்ற பிரமாண்டத்தை எட்டியுள்ள ஜாக்குலின், அதை குறிக்கும் வகையில் தனது கைகளில் கோல்டன் ஃபாயில் லெட்டர்ஸ் பலூன்களை (Golden Foil Letter Balloons) ஏந்தி புன்னகையுடன் போஸ் கொடுத்து உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த போட்டோவை ஷேர் செய்து, "எனது 1 மில்லியன் இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி ... உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்" ("Thank u all my 1 million Instagram friends and family ❤️❤️... love you all") என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ள ஜாக்குலினுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: