பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் தமிழ் டிவி ரசிகர்களின் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்து வருகின்றன முன்னணி சேனல்கள். சினிமா சார்ந்த ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள், காமெடி ஷோக்கள் என பலப்பல வெரைட்டிகளில் டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களை தங்கள் சேனல் முன் உட்கார வைக்க முயற்சிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் பிரபல முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் இடம் பெறும் ஒன்று சீரியல்கள் தான்.
எத்தனை நிழச்சிகள் வந்தாலும், போனாலும் சீரியல்களுக்கென்று பெரும் ரசிகர் வட்டம் இருப்பதால் பல ஆண்டுகளாக டிவி சேனல்களில் சீரியல்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. பெண்கள் அல்லது தாய்மார்கள் மட்டுமே பார்க்க கூடிய ஒன்று என்று குறிப்பிடப்பட்டு வந்த சீரியல்களை வித்தியாசமான கோணம், கதைக்களம் கொண்டு கலர் ஃபுல்லாக டெலிகாஸ்ட் செய்து இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும்படியான ட்ரெண்டை உருவாக்கியதில் விஜய் டிவி-க்கு முக்கிய பங்கு உண்டு.
டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல ஹிட் சீரியல்களை களமிறக்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. ஒருபக்கம் காமெடி கலக்கல் ரியாலிட்டி ஷோக்கள், பிரமாண்ட பிக்பாஸ் ஷோ என்று டெலிகாஸ்ட் செய்து வந்தாலும் விறுவிறுப்பான சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது ஸ்டார் விஜய் டிவி. அந்த வகையில் மதியம் முதல் இரவு தூங்க செல்லும் வரை ராஜபார்வை, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, நாம் இருவர் நமக்கு இருவர், காற்றுக்கென்ன வேலி, மெளனராகம், தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.
ALSO READ | முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி
இந்த சீரியல்களுக்கு மத்தியில் மதியம் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் வேலைக்காரன். விஜய் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியல் கடந்த 2020 டிசம்பர் 7 முதல் ஒளிப்பரப்பாக துவங்கியது. இந்த சீரியலில் வேலன் ரோலில் நடிகர் சபரி நடித்து வருகிறார். சீரியல் ஆரம்பித்த உடன் இது நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தை அப்படியே காப்பி அடித்து டெலிகாஸ்ட் செய்யப்படுவதாக விமர்சனம் எழுந்தது. எனினும் இதை ஒரு தடையாக எடுத்து கொள்ளாத சீரியல் குழுவினர் தங்களால் முடிந்தளவு சிறப்பாக கதையை நகரத்தி கொண்டு செல்கின்றனர்.
விமர்சனங்களை தாண்டி இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் முடிவடைய உளளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் வேலைக்காரன் சீரியலை மிகவும் விரும்பி பார்த்து வரும் ரசிகர்கள் சற்றே நிம்மதியுடன் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv