Vijay TV: விஜய் டிவியில் முடிவுக்கு வந்த முக்கிய சீரியல் - கவலையில் ரசிகர்கள்

ஈரமான ரோஜாவே சீரியல்

வெற்றி - மலர் ஜோடி, புகழ்- அகிலா ஜோடிக்காக சீரியலைப் பார்த்தவர்கள் ஏராளம்.

  • Share this:
    விஜய் டிவியில் ஹிட் சீரியல்கள் வரிசையில் இருந்த ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்கள் வரிசையில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலும் உண்டு. 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இந்த சீரியலின் திடீர் முடிவு ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய இந்தத் தொடர் முடிவுக்கு வருவதாக சீரியல் குழு அறிவித்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில், ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ‘டாட்டா Bye Bye’ சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




    ஏற்கனவே இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் பரவின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்திரி, குழுவினருடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, யூகங்களை உறுதிப்படுத்தினார். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 2.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பானது. மலராக பவித்ரா நடித்தார். இதன் மூலம் திரவியம், வெற்றி என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர்களுடன் பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும், வெற்றி - மலர் ஜோடி, புகழ்- அகிலா ஜோடிக்காக சீரியலைப் பார்த்தவர்கள் ஏராளம்.

    ஏனென்றால், அழகான நடிப்பால் இவர்கள் வெளிப்படுத்திய காதல், பார்ப்பவர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக காதலை சொல்லும் விதமும், சின்ன சின்ன குறும்புத் தனங்களும் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது. டி.ஆர்பியில் குறை சொல்லும் அளவுக்கு இல்லாமல் நாகரீகமான இடத்தில் ஈரமான ரோஜா இருந்தது. கடந்த சில வாரங்களில், வெற்றிக்கும், மலருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்து வீட்டில் சந்தோஷமான சூழல் உருவானது. அதேநேரத்தில், புகழும் அகிலாவும் ஒருவருக்கொருவர் காதலித்தாலும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருவரும் மனதிற்குள் வைத்துக்கொண்டு பிகு பண்ணிக் கொண்டிருந்த எபிசோடுகள் விறுவிறுப்பாக இருந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவர்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் சண்டை, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் ஏற்படுத்தியிருந்தது. இந்த எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கும் நிலையில் அவசர அவசரமாக ஈரமான ரோஜாவே சீரியலை நாடகக் குழுவினர் முடித்துள்ளனர். விரைவாக முடிப்பதற்கு என்ன காரணம்? என குழப்பமடைந்துள்ள ரசிகர்கள், இனிமேல் ஈரமான ரோஜா சீரியலைப் பார்க்க முடியாது என்று சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆறுதலுக்காக நாடகக் குழுவினர் வெளியிட்டுள்ள சூட்டிங் ஸ்பாட் வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்து வருகின்றனர். இதேபோல், ’அன்புடன் குஷி’ என்ற சீரியலும் முடிவடைகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: