விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட எல்லோரும் சிறப்பான முறையில் தங்களது கேரியரில் கொடிகட்டி பறக்கின்றனர். இதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. அந்த ரசிகர்களின் ஆதரவு தான் இன்றளவும் அவர்களை உயரமான இடத்தை சென்றடைய வழி செய்துள்ளது. அதே போன்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் போன்ற பல வாய்ப்புகள் அவர்களை தேடி வந்துவிடும்.
அந்த வகையில் சிலர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் பிற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அசத்தி வருவார்கள். இப்படிப்பட்ட நிலையை எட்டியவர்களில் ஒருவர் தான் கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை கேப்ரில்லா. இவர் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சிறப்பான பங்கேற்பை தந்தவர். அந்த சீசனின் இறுதியில் 5 லட்சம் பண பெட்டி உடன் கேபி வெளியில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்காகவே அவரை அதிகம் பேர் பாராட்டினார்கள். அவரின் சிறப்பான பங்கேற்பிற்காகவே இந்த வெகுமதியை அவர் பெற்றுள்ளார் என்று கூறினார்கள். பிக் பாஸில் கலந்துகொள்வதற்கு முன்னதாகவே விஜய் டிவியின் ஜோடி நம்பர் டான்ஸ் ஷோவில் இவர் கலந்து கொண்டு அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த ஜோடியின் ஆறாவது சீசனில் வின்னராகவும் இவர் தேர்வு செய்யாட்டார். அதே போன்று 7ம் வகுப்பு சி பிரிவு என்கிற விஜய் டிவி தொடரிலும் இவர் குழந்தை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி ஏற்கனவே விஜய் டிவியில் பல தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் தனக்கென முதன்மையான முத்திரையை ஏற்படுத்தி கொண்டுள்ளார் கேபி.
Also Read : சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?
சின்னத்திரையில் முத்திரை பதித்த கேபிரில்லா, சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் மற்றும் சுருதி ஹாசன் நடித்த 3 படத்தில் சுருதிக்கு தங்கையாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். அடுத்தாக சென்னையின் ஒரு நாள், அப்பா போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார். அதன் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கே வந்து விட்டார். தற்போது இவர் விஜய் டிவியின் டாப் தொடரான ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது திறமையின் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தற்போது கேபி சொந்தமாக ஒரு புது கார் வாங்கி உள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் டாடா ஹரியர் டார்க் எடிஷன் காரை வாங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த காருடன் தான் நின்று எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அதில் இணைத்துள்ளார். இந்த காரின் விலை 25 லட்சத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. கேபிரில்லாவின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் இன்ஸ்டாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.