1990 இல் 'சுபயாத்ரா' என்கிற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒரு குட்டி பொண்ணு, 1999-ல் விஜய் டிவியின் 'உங்கள் தீர்ப்பு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டு ஒரு 'சைல்ட் ஆங்கர்' ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அது வேறு யாருமில்லை டிடி என்கிற திவ்யதர்ஷினி தான்!
ஒருகட்டத்தில் ராஜ் டிவியின் முக்கிய ஆங்கர் ஆக உருமாறிய டிடி, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான 'றெக்கை கட்டிய மனசு' என்கிற சீரியல் வழியாக தனது சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார். வெள்ளித்திரையில் சில கேமியோ தோற்றங்களுக்குப் பிறகு, திவ்யதர்ஷினி மீண்டும் சின்னத்திரைக்கே வந்தார்.
இன்று வரை சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களாக திகழும் 'செல்வி' மற்றும் 'அரசி' ஆகிய தொடர்களிலும் டிடி குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். எங்கிருந்து தொடங்கினாரோ, அங்கேயே மீண்டும் நுழைந்த டிடி, 2007 ஆம் ஆண்டு வாக்கில் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர்களில் ஒருவராக தன்னை வளர்த்துக்கொண்டார்.
Read More : அந்த சீரியல் நடிகருடன் விஜய் சேதுபதி இவ்வளவு நெருக்கமா! வைரல் ஃபோட்டோ
ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் உட்பட விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினாலும் கூட டிடி-க்கு ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளமே உருவானது 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சி வழியாகத்தான். சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்பினால் டிஆர்பி ரேட்டிங் எந்த அளவிற்கு எகிறுமோ அதே அளவிற்கு 'காஃபி வித் டிடி' ஷோவின் டிஆர்பி ரேட்டிங் சும்மா பட்டையை கிளப்பியது.
விஜய் டிவியின் தவிர்க்க முடியாத முகமாக மாறிய டிடி, தற்போது முன்பை போல நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். இதற்கிடையில் தான் டிடி ஒரு எபிசோடிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டிடி ஒரு எபிசோடுக்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். ஒருவேளை சினிமாவில் நடித்துக்கொண்டே சின்னத்திரையிலும் இருப்பதால் இந்த அளவிலான தொகை அவருக்கு கொடுக்கப்படுகிறதோ?
1990-இல் மலையாள சினிமா வழியாக அறிமுகமான டிடி, பெரிய இடைவெளிக்கு பிறகு, அதாவது 2003 இல் தான் மீண்டும் சினிமாவிற்குள்ளேயே நுழைந்தார். ஜூலி கணபதி, நள தமயந்தி, விசில், ஃபைவ் பை ஃபோர், சரோஜா, பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் போன்ற தமிழ் படங்களில் சிறுசிறு காதாபாத்திங்களை ஏற்று நடித்துள்ளார். ஆங்கரிங், ஆக்டிங் மட்டுமல்ல டப்பிங் துறையிலும் டிடி பணியாற்றி உள்ளார். 2008 இல் வெளியான சரோஜா மற்றும் 2010 ஆம் ஆண்டில் வெளியான கோவா படங்களில் நடித்த நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்தது திவ்யதர்ஷினி தான்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.