முன்பெல்லாம் சின்னத்திரை வேறு, வெள்ளித்திரை வேறு என்று பிரித்து பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமையே மாறி விட்டது. சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் சிறப்பான இடத்தை பிடித்தவர்களும் இருக்கிறார்கள்.
அதே போல வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த பலர், தற்போது மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் என பலரும் சின்னதிரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டார் விஜய் டிவி-யானது தமிழ் திரையுலகில் பல திறைமை மிக்க நடிகர், நடிகைகளை உருவாக்கி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அதன் மூலம் வெள்ளித்திரைக்கான வாய்ப்பை பெற்றவர்கள் ஏராளம். அதே போல வெள்ளித்திரையில் குறைவான பிரபலம் பெற்று, விஜய் டிவி ஷோக்களில் பங்கேற்ற பிறகு வெள்ளித்திரையில் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். புகழ் என்றவுடன் உங்களுக்கு சட்டென்று குக் வித் கோமாளி புகழ் கட்டாயம் நினைவிற்கு வந்திருப்பாரே. இப்போது அவரை பற்றியும், தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்றிருக்கும் பிரபல நடிகை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.
குக் வித் கோமாளி பற்றி உங்களுக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இதன் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பவர் நடிகை அம்மு அபிராமி. இவர் ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் தான். தற்போது குக் வித் கோமாளி மூலம் நிறைய ரசிகர்களை பெற்று முன்பை விட பிரபலமாக இருக்கிறார்.
Also Read : வருங்கால மனைவி பென்ஸியுடன் குக் வித் கோமாளி புகழின் லேட்டஸ்ட் படம்!
இவர்கள் இருவரில் தனது காமெடி திறமை மூலம் சமீபத்தில் வெள்ளித்திரையை எட்டிய புகழ், ஏற்கனவே சூர்யா மற்றும் அஜித் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் புகழ். நடிகை அம்மு அபிராமி பைரவா படத்தில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டாக நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். பின் தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
Also Read : இப்படியெல்லாம் நடக்க ஆல்யா மானசா தான் காரணமா? வருத்தத்தில் சீரியல் குழு!
இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்களான இவர்கள் இருவரும் "பாலமுருகனின் குதூகலம்" என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். அம்மு அபிராமி ஹீரோயினாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குக் வித் கோமாளி புகழ். படத்தின் கதாநாயகனாக புதுமுக நடிகர் பாலமுருகன் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.