Cook With Comali: நீங்கள் நினைப்பதை விட அஸ்வின் மேலானவர் - ஷிவாங்கி

Cook With Comali: நீங்கள் நினைப்பதை விட அஸ்வின் மேலானவர் - ஷிவாங்கி

குக் வித் கோமாளி அஸ்வின், ஷிவாங்கி

சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பதிலளித்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

முதல் சீசனில் கோமாளிகளாக இருந்தவர்கள் இந்த முறையும் இடம்பெற்றிருப்பதால் காமெடிக்கு பஞ்சமில்லை. இந்நிகழ்ச்சியில் ஷிவாங்கி, புகழ் இடையேயான அண்ணன்- தங்கை பாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் அஸ்வின் - ஷிவாங்கி இடையேயான குறும்புத்தனங்களும் ரசிக்கத்தக்க வகையில் இருப்பதையும் ரசிகர்களின் சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது. மேலும் சமையல் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறலாம்.

இந்நிகழ்ச்சியில் தனது தனித்திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த ஷிவாங்கி அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கும் ஷிவாங்கி குக் வித் கோமாளி அஸ்வின் குறித்தும் பேசியுள்ளார்.




அஸ்வின் குறித்த கேள்விக்கு ஷிவாங்கி அளித்த பதிலில், “அஸ்வின் மிகவும் இனிமையானவர். மிகவும் அக்கறை செலுத்தக்கூடியவர். சிறப்பாக சமைப்பார். அவர் எப்போது சமைத்து முடிப்பார் என்று நாங்கள் காத்திருந்து பிடுங்கி சாப்பிடுவோம். இயல்பாகவே அஸ்வின் ஒரு நகைச்சுவையான மனிதர். நீங்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதற்கும் மேலாக இருப்பார்.” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: