குக் வித் கோமாளி புகழின் மாஸ்டர் டான்ஸ் - வீடியோ

குக் வித் கோமாளி புகழின் மாஸ்டர் டான்ஸ் - வீடியோ

விஜய் டிவி புகழ்

குக் வித் கோமாளி புகழ் மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடியுள்ளார்

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் சோஷியல் மீடியாக்களில் ஆர்மி பக்கமும், ரசிகர் பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடியால் கலக்கி வரும் புகழின் சமூகவலைதள பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில் மாஸ்டர் படத்தின் தீம் மியூசிக்குக்கு நடனமாடியுள்ளார் நடிகர் புகழ். அவரது இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.



தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான புகழுக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் புகழ் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
Published by:Sheik Hanifah
First published: