Cook With Comali: மனைவியின் புகைப்படத்தை பதிவிட்ட குக் வித் கோமாளி பிரபலம் - ரசிகர்கள் ஆச்சர்யம்

குக் வித் கோமாளி டீம்

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்‌ஷன் 10 வருடங்களுக்கு முன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

முதல் சீசனில் கோமாளிகளாக இருந்தவர்கள் இந்த முறையும் இடம்பெற்றிருப்பதால் காமெடிக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளரும் நடிகருமான ரக்‌ஷன் தனது மனைவியுடன் 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருக்கிறார். இதுவரை ரக்‌ஷன் திருமணமாகாதவர் என்று தான் பலரும் நினைத்திருந்தனர். எனவே அவரது இந்த பதிவு ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் பார்க்க... ரசிக்க: இணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஒரு சில சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்‌ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் நண்பராக நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: