HOME»NEWS»ENTERTAINMENT»vijay tv cook with comail tamil rithika eliminate this week msb

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நபர்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நபர்?
குக் வித் கோமாளி 2
  • Share this:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ஏற்கெனவே இந்நிகழ்ச்சியிலிருந்து மதுரை முத்து, தீபா, தர்ஷா ஆகிய மூவரும் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த நடிகை ரித்திகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரித்திகாவுக்கு கோமாளியாக பாலா இருந்தார்.



பாக்கியலட்சுமி தொடரில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா இதற்கு முன்பு சூப்பர் சிங்கர் கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் வெற்றி பெற்ற நிலையில் இந்த சீசனில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: