வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் - மக்களுக்கு விஜய் டிவி பிரபலங்கள் வேண்டுகோள்

அஸ்வின் -அறந்தாங்கி நிஷா

நடிகர் சூர்யா, விஜய், அஜித், நடிகைகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

  • Share this:
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தையும் விட்டு வைக்காத கொரோனா பரவலால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. எனினும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. வெண்டிலேட்டர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரசு திணறி வருகிறது. இதனால் ஏராளமானோர் தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களும், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா, விஜய், அஜித், நடிகைகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த கொரோனா பரவல் சினிமா துறையை அதிகம் பாதித்துள்ளது. அதிலும் திரையுலகை சேர்ந்த பலரும், அவருடைய உறவினர்களும் கொரோனா காரணமாக மரணமடைந்து வருகிறார்கள். கொரோனா தவிர்த்த பிறபாதிப்புகளாலும் நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமானோர் மற்றும் சின்னத்திரை பிரபலங்களும் மறையும் செய்தியை தினமும் கேட்க முடிகிறது. இதனால் சினித்துறையை சேர்ந்த ஏராளமானோர் பாதுகாப்பாக இருக்குமாறு தங்கள் ரசிகர்களுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், போதும் எல்லாரையும் இழந்தது. இந்த கொரோனா பரவல் காலத்தில் கொஞ்சம் சீரியஸா இருங்க. மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். சானிடைசர் உபயோகப்படுத்துங்கள் என அவரது தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ரியோ, இழப்புகள் சத்தம் கேட்டு கேட்டு ஒவ்வொரு நாளும் நரகமாக உள்ளது. கோவிட் தயவு செய்து போய்விடு என குறிப்பிட்டுள்ளார். சிவாங்கி தனது வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக என கோரிக்கை விடுத்துள்ளார்.

AlsoRead:ஊசியில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா - நெட்டிசன்கள் கேள்வி

மேலும் அறந்தாங்கி நிஷா நாம உயிரோட இருந்தா மட்டும் தான் நமது கனவுகளை நிஜமாக்க முடியும், இப்போது உள்ள சூழ்நிலையில், நமது ரொம்ப பயத்தை ஏற்படுத்துகிறது. நமக்கு நெருக்கமான நபர்கள் நமக்கு தெரிந்தவர்கள் நம்மை விட்டு போகும் போது வலி அதிகம் உள்ளது. தயவு செய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக சென்றாயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு கொரானா ஏற்பட்டது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சென்றாயன் வெளியிட்டிருந்தார். அதில் சினிமாவில் ஜெயிக்கணும் என்று எப்போதும் வாழ்க்கையை பாசிடிவாக இருப்பவன் நான். ஆனா எனக்கே இப்போது கொரானா தொற்று பாதிப்பு வந்துருச்சி. ஆரம்பத்தில் கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்தேன். ஆனால் எனக்கு இப்போது கொரானா தாக்கியுள்ளது. தற்போது என் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். ‘கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே’. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: