விஜய் டிவியில் இந்த சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாச்சு

விஜய் டிவியில் இந்த சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாச்சு

விஜய் டிவி சீரியல் குழு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியல் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாகும் இத்தொடர்களின் ப்ரமோ வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வருகிறது.

பார்வையாளர்களை திருப்திப்படுத்தவும், டிஆர்பி ரேட்டிங்கில் முந்திச் செல்லவும் புதிய தொடர்களை களமிறக்கும் விஜய் டிவி நாளை முதல் ‘வேலைக்காரன்’ என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ள இத்தொடரில் சோனா நாயர் (விசாலாட்சி), சபரி (வேலன்), கோமதி பிரியா (வள்ளி), சத்யா (ராகவன்), வாசு விக்ரம் (சிங்கபெருமாள்) மற்றும் நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த  'பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியல் முடிவடைந்திருப்பதாக அத்தொடரின் நடிகர்கள் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இத்தொடரில் ரேத்வா என்ற குழந்தை நட்சத்திரம் பொம்முவாக நடித்திருந்தார். கிரண், ராஷ்மிதா ரோஜா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாகவும், ஸ்ரீதேவி அசோக், ஸ்ருதி, சண்முகப்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ தொடரின் பயணத்தை மறக்கமுடியாது என்றும், அந்த நாட்கள் தங்களுக்கு திரும்ப கிடைக்காது என்றும் அத்தொடரில் நடித்த நடிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: