ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

பாரதி கண்ணம்மா  புரமோவை பார்த்த சீரியல் ரசிகர்கள் உற்சாகத்துடன் வெண்பாவை வரவேற்றுள்ளனர்.

பாரதி கண்ணம்மா புரமோவை பார்த்த சீரியல் ரசிகர்கள் உற்சாகத்துடன் வெண்பாவை வரவேற்றுள்ளனர்.

பாரதி கண்ணம்மா புரமோவை பார்த்த சீரியல் ரசிகர்கள் உற்சாகத்துடன் வெண்பாவை வரவேற்றுள்ளனர்.

  • 2 minute read
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வில்லி வெண்பா மீண்டும் ரீ என ட்ரி கொடுக்கிறார். அதை உறுதி செய்யும் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கடந்த 2 மாதங்களாக மோசமான டி.ஆர்.பி ரேட்டிங்கில் சென்று விட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம், வில்லியாக நடித்த டாக்டர் வெண்பா பிரசவத்திற்காக சீரியலை விட்டு சென்றது. அடுத்தது, கண்ணம்மாவாக சீரியலின் லீட் ரோலில் நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலக்கியது. இதனால் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் குறைந்தது.

புது கண்ணம்மாவாக வினுஷா தேவி அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ரோஷினியை மறக்கவில்லை. புது கண்ணம்மாவையும் ஏற்றுக் கொள்ளவிலை இதனால் சீரியல் குழு பல அதிரடி திருப்பங்களை சீரியலில் கொண்டு வந்தது. பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகள், கண்ணம்மா மற்றும் பாரதிக்கு இடையில் செல்ல சண்டைகள், கதையில் கூடுதல் சுவாரசியத்தை கூட்ட ‘வாய்தா வடிவுக்கரசி’ ரோலில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவையும் சீரியலில் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க.. நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

இப்போது ஓரளவுக்கு சிரீயல் கதைக்களம் சூடுப்பிடித்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. கண்ணம்மாவாக வினுஷாவின் நடிப்பும் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரீ என் ட்ரி கொடுத்துள்ளார். இதை உறுதி செய்யும் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவில் வெண்பாவுக்கு இண்ட்ரோ பாடல் எல்லாம் போடப்பட்டு கெத்தாக, மாஸாக வெண்பா ஜாமீனில் வெளிவந்ததாக கூறுகிறார்.

இதையும் படிங்க.. பாவ்னி, அபிநய் ‌‌‌மற்றும் அமீர் விஷயத்தில் மீண்டும் எல்லை மீறும் கேள்விகள்!

அதுமட்டுமில்லை இனி, பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ந்து வாழ விடமாட்டேன் எனவும் சபதம் போடுகிறார். இந்த புரமோவை பார்த்த சீரியல் ரசிகர்கள் உற்சாகத்துடன் வெண்பாவை வரவேற்றுள்ளனர். அதுமட்டுமில்லை, இனி சீரியல் ஜெட் வேகத்தில் செல்லும், ட்விஸ்டுகளுக்கு பஞ்சமே இருக்காது எனவும் கூறியுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: