• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குடும்பமே நடிகர்களா ? வைரலாகும் பாரதி கண்ணம்மா லட்சுமியின் ஒரிஜினல் குடும்பம்..

குடும்பமே நடிகர்களா ? வைரலாகும் பாரதி கண்ணம்மா லட்சுமியின் ஒரிஜினல் குடும்பம்..

காட்சி படம்

காட்சி படம்

பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் ரக்‌ஷாவின் அப்பா யார் தெரியுமா ?

  • Share this:
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் (நடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ்) மூத்த மகளாக நடித்து வருபவர் குழந்தை நட்சத்திரமான ரக்ஷா. தனது துடுக்கான மற்றும் இயல்பான நடிப்பால் சீரியலுக்கு சுவாரசியம் சேர்த்து வருகிறார் குட்டி நட்சத்திரமான ரக்ஷா. இவர் ஏற்கனவே பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் க்யூட்டான குழந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறார். இதை தாண்டி இவர் பிரபல சீரியல் நடிகரின் மகளும் ஆவார்.

உதிரிப்பூக்கள், ஆனந்த கண்ணன், கோலங்கள், தென்றல் போன்ற பல மெகாஹிட் சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர் சீரியல் நடிகர் ஷ்யாம். இவருக்கு மொத்தம் 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் தான் பாரதி கண்ணம்மா மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த குட்டி நட்சத்திரம் ரக்ஷா. சீரியல் நடிகர் ஷ்யாமின் மூத்த மகளும் சீரியலுக்குள் நுழைந்து கலக்கி வருகிறார். நடிகர் ஷ்யாமின் மூத்த மகள் பெயர் நிவாஷினி. இவர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தற்போது விஜய் டிவியின் செந்தூரப் பூவே சீரியலில், கனிமொழி துரைசிங்கம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் ஷ்யாம் நடிப்பதில் மட்டுமல்லாமல் மிமிக்ரி மற்றும் நன்றாக பாடுவதிலும் வல்லவர். இளைய மகள் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பிற்கு அறிமுகமானது போல, இவரும் சிவகார்த்திகேயனின் படம் ஒன்றில் தான் வெள்ளித்திரையில் பாடகராக அறிமுகமானார். அதிலும் யுவனின் இசையில். ஆம் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோவில் சிங்கிள் ட்ராக்கை பாடி நடிகர் ஷ்யாம் பாடகராக அறிமுகமானார்.



also read : பிக்பாஸ் சீசன் 5ல் தொடங்கிய குரூப்பிஸம்.. ஐக்கி, இசையிடம் புலம்பும் பாவனி..

இந்த வாய்ப்பு மூலம் நடிகராக மட்டுமே இருந்து வந்த ஷ்யாம் பாடகராக புது அவதாரம் எடுத்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த வாய்ப்பு பற்றி முன்பு அளித்த பேட்டியில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஷ்யாம், கல்லூரி நாட்களில் இருந்தே மேடைகளில் பாடி வந்ததாகவும், கானா பாடல்களையே இதுவரை அதிகம் பாடி உள்ளதாகவும் கூறினார். சினிமாவில் பின்னணி பாடகராகும் கனவு இருந்தது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இப்போது ஹீரோ மூலம் சினிமா பாடகராகே வேண்டுமென்ற கனவு நிறவேறி உள்ளது என்று கூறி இருந்தார்.

தற்போது பூவே உனக்காக சீரியலில் ஷ்யாம் நடித்து வருகிறார். ஏற்கனவே தந்தையும், அக்காவும் சீரியலில் கலக்கி வரும் நிலையில் இவர்கள் இருவரையும் விடவே குட்டி நட்சத்திரமான ரக்ஷா அதிகமாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் நடிகர் ஷ்யாமின் ஃபேமிலி ஃபோட்டோவை பார்க்கும் ரசிகர்கள், குடும்பமே சீரியல் குடும்பமாக இருக்கிறீர்களே என்று வேடிக்கையாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: