• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி - பரபரப்பு திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!

Bharathi Kannamma: கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி - பரபரப்பு திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

தான் திருமணம் செய்து கொள்ள ஆசைபட்ட பாரதியை கல்யாணம் செய்து கொண்ட கண்ணம்மாவை வெறுக்கும் வில்லி வெண்பா, இருவருக்கும் இடையில் சூழ்ச்சி செய்து பிரிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்கிறாள்.

  • Share this:
பாரதி கண்ணம்மா சீரியலில் பிரிந்திருக்கும் மனைவி கண்ணம்மா வீட்டிற்கு பாரதி நேரடியாக செல்வதால் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் உச்சக்கட்ட பரபரப்புகளுடன் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே பல டிவிஸ்களுக்கு விடை கிடைக்காத அடுத்தடுத்த டிவிஸ்டுகள் நடப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. கதையின் ஹீரோவான பாரதி டாக்டராக இருந்தாலும், தனக்கு நிகராக படித்திருக்கும் பெண்ணை விரும்பாமல் குணத்தில் சிறந்தவளாக இருக்கும் கண்ணம்மாவை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். இது பாரதியின் தோழிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தான் திருமணம் செய்து கொள்ள ஆசைபட்ட பாரதியை கல்யாணம் செய்து கொண்ட கண்ணம்மாவை வெறுக்கும் வில்லி வெண்பா, இருவருக்கும் இடையில் சூழ்ச்சி செய்து பிரிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்கிறாள். அப்பாவி பெண்ணான கண்ணம்மாவுக்கு இது புரியவில்லை. வெண்பாவின் சூழ்ச்சிக்கு இரையாகும் பாரதி கண்ணம்மாவை மெல்ல வெறுக்கத் தொடங்குகிறான். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, கர்ப்பிணியாக இருக்கும்போதே வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறான். தாய்மை அடைந்திருக்கும் கண்ணம்மா, கணவருடன் ஏற்பட்ட சண்டையால் என்ன செய்வதென்று தெரியாமல் தெருதெருவாக அலைகிறாள்.

பாரதியை கண்ணம்மாவிடம் இருந்து பிரித்த வெண்பாவுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், நிரந்தரமாக பிரிப்பதற்கான சூழ்ச்சியில் இறங்குகிறாள். இதற்கிடையே கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்து விடுகிறது. மருத்துவமனையில் கண்ணம்மா மயக்க நிலையில் இருக்கும்போது, அங்கு வரும் மாமியார், அதாவது பாரதியின் அம்மா இரட்டைக் குழந்தையின் ஒருவரை எடுத்துக் கொண்டு சென்று வளர்ப்பு மகளாக வளர்க்கிறாள். இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் வளர்கிறது. வீட்டில் வளரும் குழந்தை தன்னுடையது என்று தெரியாமல் அவளை வளர்க்கிறான்.



பாரதி வீட்டில் வளரும் குழந்தை ஹேமா வளர்ந்து பள்ளிக்கு செல்லும்போது, அங்கு வரும் சமையல் அம்மாவை பிடித்து விடுகிறது. அவர் யார் என்று பார்த்தால் கண்ணம்மா. அவரின் சமையல் சுவை பிடித்துவிடுவதால் எப்போதும் கண்ணம்மாவின் சமையலை விரும்பி சாப்பிடுகிறார் ஹேமா. இதனையறிய பாரதிக்கு கடும்கோபம் ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகும் நேரத்தில் ஹேமா கடத்தப்படுகிறாள். ஹேமாவை கடத்தியது கண்ணம்மா என நம்பும் பாரதி, அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார். கண்ணம்மா கடுமையாக போராடி கடத்தல்காரர்களிடம் இருந்து ஹேமாவை காப்பாற்றுகிறாள். உண்மையில் கடத்தல் வேலையில் ஈடுபட்டது வில்லி வெண்பா.

Also read... Roja: ரோஜா சீரியலின் புதிய வில்லி இவரா? தொகுப்பாளினியின் சின்னத்திரை என்ட்ரி!

கண்ணம்மா மீது கடும் கோபத்தில் இருக்கும் பாரதியிடம் பேசும் குழந்தை ஹேமா, தன்னை காப்பாற்றியது கண்ணம்மா என்று கூறுகிறாள். கடைசியாக உண்மையை அறிந்து கொள்ளும் பாரதி, கண்ணம்மா வீட்டிற்கே நேரில் சென்று நன்றி தெரிவிக்கிறான். இந்த எபிசோட் அடுத்தடுத்த நாட்களில் ஒளிபரப்பாகிறது. பாரதிக்கு பிடித்த முந்திரி கேசரியை செய்து கொடுக்கும் கண்ணம்மாவை பார்த்து மகிழ்ச்சியடையும் குழந்தை ஹேமா, தனது தந்தைக்கு பிடித்ததை கரெக்டா நீங்க எப்படி செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்புகிறது. அதற்கான விடையை இன்றைய எபிசோடில் கண்ணம்மா சொல்ல உள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: