Home /News /entertainment /

சட்டென்று ஓடிய 1 வருடம் - விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் கொண்டாட்டம்

சட்டென்று ஓடிய 1 வருடம் - விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் கொண்டாட்டம்

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்து பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார் நடிகை சுசித்ரா ஷெட்டி.

விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுனால் மக்கள் பல மாதங்களுக்கு தொடர்ந்து வீடுகளுக்குள்ளயே முடங்கினர். இதனால் நன்றாக ஓடி கொண்டிருந்த பல சீரியல்களின் ஷூட்டிங் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டது. பல சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டன. அதே நேரத்தில் இடையே லாக்டவுன் தளர்த்தப்பட்டதால் மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் துவங்கியது.

கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் நிம்மதியின்றி தவித்த சூழலில் அவர்களை கலகலப்பாக அனைத்து டிவி சேனல்களும் போட்டி போட்டு கொண்டு பல புதிய சீரியல்களை துவக்கின. அப்படி கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக துவங்கிய சீரியல் தான் இந்த பாக்கியலட்சுமி. சீரியல் துவங்கிய புதிதில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், வித்தியாசமான கதைகளம் என்பதால் இந்த சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்து பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார் நடிகை சுசித்ரா ஷெட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரியாக படிக்காத ஒரு குடும்பத்தலைவி, கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்களிடம் படும் நிறைய அவமானங்களை தாண்டி தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை மையக்கருவாக கொண்டு இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. தனது அப்பாவித்தனமான நடிப்பால் பாக்கியலட்சுமி கேரக்டருக்கு தொடர்ந்து வலு சேர்த்தார் நடிகை சுசித்ரா. இதனால் இந்த சீரியலுக்கான டிஆர்பி ரேட்டிங்கும் எகிறியது. சில மாதங்களில் லாக்டவுன் முடிந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெண்கள் உட்பட பலர் வேலைகளுக்கு செல்ல துவங்கி விட்டனர்.

எனவே பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெருகிய ஆதரவு வட்டத்தை தக்க வைக்க பிரைம் டைமிங் ஸ்லாட்டான 8.30 மணிக்கு மாற்றப்பட்டது. அதிலும் விஜய் டிவி-யில் பெரியளவில் ஹிட்டடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு அடுத்து பாக்கியலட்சுமி ஒளிபரப்பு செய்யப்படுவதால் பிரைம் டைமிங்கிளை விஜய் டிவி-யின் டிஆர்பி பெரும் உச்சத்தை சந்தித்து வருகிறது.

Also read... எப்படி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் - கங்கனா வெளியிட்ட புகைப்படம்!

பாக்கியாவின் கணவராக வரும் கோபியின் நடிப்பிற்கும் ரசிகர்கள் அதிகம். தான் காதலித்த பெண்ணான ராதிகாவை சந்தித்த பின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர் செய்யும் தகிடுதத்த வேலைகள் காரணமாக பல எபிசோட்கள் விறுவிறுப்பாக செல்கின்றன. விஜய் டிவி சீரியல்களில் முதல் 5 இடத்தில இருக்கும் சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்றாக இருந்து வருகிறது. 
View this post on Instagram

 

A post shared by Mask Kanmani (@mask_kanmani)


இதனிடையே ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் 1 வருடத்தை நேற்றுடன் நிறைவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 27 முதல் இந்த சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து சீரியல் நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் 1 வருட நிறைவை கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான போட்டோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி