ஆயுத எழுத்து சீரியல் ஆனந்த் செல்வன் நினைவிருக்கிறதா? இவரின் அடுத்த சீரியல் இதுதான்!

ஆனந்த் செல்வன்

விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் ஆனந்த் செல்வன், தற்போது ஜீ தமிழின் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  • Share this:
நடிகர் ஆனந்த் செல்வனை நினைவிருக்கிறதா? விஜய் டிவியின் பிரபலமான ஆயுத எழுத்து சீரியலில் நடித்தவர் ஆனந்த் செல்வன். இவர் தற்போது ஜீ தமிழ் சேனலின் புதிய சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் தொலைகாட்சிகளில் பிரபலமாக இருக்கும் சேனல்களில், ஜீ தமிழும் ஒன்று! ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், சீரியலுக்கும் இருப்பது போலவே, ஜீ தமிழ் சேனல் கணிசமான ரசிகர்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் ஆனந்த் செல்வன், தற்போது ஜீ தமிழின் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆயுத எழுத்து சீரியலில், கதாநாயகனாக நடித்த இவரின் பாத்திரம் மிகவும் பரவலாக பேசப்பட்டு, பிரபலமானார். சீரியல் ரசிக ரசிகைகள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்த ஆனந்த் செல்வன், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கவுள்ளார்.

இந்த சீரியலில் இவர் பிரதான வேடத்தில், நாயகனாக நடிக்கிறார். சீரியலின் படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் செல்வன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில், படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சீரியலின் பெயர் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்றும், இந்தத் தொடரை, மான்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.



இந்த குழுவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஆயுத எழுத்து சீரியல் தவிர்த்து, ஆனந்த் செல்வன் கலர்ஸ் தமிழின் உயிரே சீரியலிலும் நடித்துள்ளார்.

Also Read: கர்ப்பகால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்ட நடிகை கரீனா கபூர் மீது போலீஸில் புகார்

இதற்கிடையே, ‘நினைத்தாலே இனிக்கும்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த சீரியல், ஜீ தமிழின் ஹிட் சீரியலான ‘யாரடி நீ மோகினி’ இன் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது. யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் முடிந்து விட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்கிய புது சீரியல் அதனுடைய தொடர்ச்சியாக ஆக இருக்கலாம் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால், யாரடி நீ மோகினி சீரியலுக்கும், புதிய சீரியலான நினைத்தாலே இனிக்கும் சீரியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டும் வெவ்வேறு கதையோட்டத்தைக் கொண்டது என்று சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Photos: நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..

இந்த புதிய சீரியலைத் தயாரிக்கும் மான்க் ஸ்டுடியோஸ் தான் யாரடி நீ மோகினி சீரியலையும் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும், சீரியல் ஒளிபரப்பு ஆகத் தொடங்கியவுடன், இந்த செய்தி உண்மை தானா என்பது தெரிந்து விடும். மேலும், மற்ற நடிகர்கள், சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நேரம் ஆகியவற்றை பற்றிய தகவல் விரைவிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: