• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களை கவர்ந்த விஜய் டிவி டிடியின் டான்ஸ் வீடியோ..

ரசிகர்களை கவர்ந்த விஜய் டிவி டிடியின் டான்ஸ் வீடியோ..

திவ்ய தர்ஷினி

திவ்ய தர்ஷினி

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவி-யில் அன்று முதல் இன்று வரை மாறாத ஒரே விஷயம் என்றால் அது தொகுப்பாளினி டிடி தான். முதன்முதலில் ஆங்கரிங் மூலம் மக்களின் மனதை ஈர்த்த ஒருவர் தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இன்றளவும் பலருக்கு ஆங்கர் ஆக வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைத்தவர் தான் டிடி. அந்தளவுக்கு பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அவரது நகைச்சுவை கலந்த பேச்சு, ஸ்டைல், தொகுத்து வழங்கும் பாணி போன்றவற்றால் எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

ஏன் இப்போது தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி ஆங்கரிங் ஆக திகழும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளில் தனது ரோல் மாடல் டிடி என்று சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சித் துறையில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் பிரபலம் யார் என்றால் அது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தான். பள்ளியில் படிக்கும் போதே ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தவர், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.



விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதோடு விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். ஆனால் திடீரென டிவி நிகழ்ச்சியில் இருந்தும், சினிமாவில் நடிப்பதில் இருந்தும் இருந்தும் விலகிவிட்டார். இருப்பினும், அவ்வப்போது ஏதாவதொரு விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுதி வழங்கி வருகிறார். இருப்பினும், தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ரீலிஸ், போட்டோஸ் போன்றவற்றை பகிர்வது வழக்கம். இந்த நிலையில், சமீபத்தில் நயன்தாராவின் நெற்றிக்கண் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினார்.



அந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு, நிகழ்ச்சி நன்றாக முடிந்ததற்காக ஒரு டான்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு கியூட்டான டான்ஸ் பெர்பாமென்ஸ்-ஐ கொடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவில், " ஷோவும் நல்லா வந்துச்சு, இந்த நாளும் நல்லா வந்துச்சு, அதனால இப்போ இது இன்ஸ்டா-க்கு வந்துச்சு" என்று நகைச்சுவையாக கேப்ஷன் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறதுvi

சென்னையில் பிறந்து வளர்ந்த டிடி, கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பயணம் மற்றும் சுற்றுலா நிர்வாகத்தில் எம்.பில் படித்தார். மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தந்தையை இளம் வயதிலேயே இழந்துவிட்டதால், குடும்ப சூழ்நிலை காரணமாக வெகு விரைவில் வேலைக்குச் செல்லும் நிர்பந்தத்திற்கு ஆளானார்.



1990-ல் சுபயாத்ரா எனும் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விசில், நள தமயந்தி, உள்ளிட்ட படங்களிலும் தனது ஆரம்ப கால நாட்களில் நடித்தார். அதோடு, சன் டிவி-யில் ஒளிபரப்பான சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து விஜய் டிவி-யில் என்ட்ரி கொடுத்த இவர், பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: