ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Keerthy Suresh: உண்மையில் பெருமையாக இருக்கிறது - நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நன்றி சொன்ன ரேஷ்மா வெங்கடேஷ்!

Keerthy Suresh: உண்மையில் பெருமையாக இருக்கிறது - நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நன்றி சொன்ன ரேஷ்மா வெங்கடேஷ்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ்

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ்

ராஜஸ்தானை சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் வேலை செய்து வருகிரான் ஹீரோ அன்பு. முதலாளியின் மகளான குஷி ஃபேஷன் டிசைனராக வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுகிறார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜே மற்றும் சின்னத்திரை நடிகையான ரேஷ்மா வெங்கடேஷ் தனது இன்ஸ்டாவில் தான் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் பிளாக் அன்ட் ஒயிட் ஃபோட்டோ ஒன்றை ஷேர் செய்து, முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் 'அன்புடன் குஷி' சீரியலலும் ரசிகரிகளின் ஆதரவை பெற்றுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் வேலை செய்து வருகிரான் ஹீரோ அன்பு. முதலாளியின் மகளான குஷி ஃபேஷன் டிசைனராக வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால் குடும்பத்தினரின் விருப்பப்படி ராஜஸ்தானி பையனை திருமணம் செய்து கொண்டால் தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று எண்ணுகிறாள். குஷியின் ஆசை மற்றும் அன்பு - குஷி இடையேயான காதல் உள்ளிட்டவை இந்த சீரியலின் கதைக்களமாக உள்ளது. சமீபத்தில் 300 எபிசோட்களை கடந்த அன்புடன் குஷி சீரியலில் அன்பு கேரக்டரில் நடிகர் ப்ரஜின், குஷி கேரக்டரில் தற்போது நடிகை ஷ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார். இந்த சீரியல் துவங்கிய போது குஷி கேரக்டரில் மான்சி ஜோஷி நடித்தார். அதன் பின்னர் குஷி கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடல், வி.ஜே மற்றும் நடிகை என பன்முக திறமை கொண்டு தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் ரேஷ்மா வெங்கடேஷ், 1997-ல் பிறந்தவர். ஊட்டியில் வளர்ந்த இவர் ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் பி.காம் முடித்தார். ஆதித்யா டிவியில் வி.ஜே-வாக சின்னத்திரை வாழ்க்கையை துவங்கிய ரேஷ்மா வெங்கடேஷ், ஸ்டார் விஜய் அன்புடன் குஷி மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

Also read... Colors Tamil: கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய சீரியலில் ஜோடி சேரும் நிஜ காதல் பறவைகள் - ரசிகர்கள் உற்சாகம்!

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ், தற்போது பழம்பெரும் நடிகை சாவித்திரியின் கெட்டப்பில் தான் இருக்கும் பிளாக் அன்ட் ஒயிட் ஃபோட்டோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். மேலும் இந்த ஃபோட்டோவை ஷேர் செய்து, என்னுடைய குருவான சாவித்ரி அம்மாவின் கெட்டப்பை போட்டு கொண்டுள்ளதை நினைத்து உண்மையில் நான் பெருமைப்படுகிறேன். இந்த தலைமுறைக்கு சாவித்திரி அம்மாவை அப்படியே காட்டியதற்காக நடிகை கீர்த்தி சுரேஷூற்கு நன்றி என்றும் ரேஷ்மா வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Reshmavenkatesh (@reshmavenkatesh01)மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கெட்டப்பில் இருக்கும் நடிகை ரேஷ்மா வெங்கடேஷின் ஃபோட்டோ யூஸர்களிடேயே கலவையான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. ஒரு சில ரசிகர்கள் நன்றாக இருப்பதாக பாராட்டும் நிலையில், சிலர் இந்த கெட்டப் ரேஷ்மாவிற்கு சூட் ஆகவில்லை என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actress Keerthi Suresh