கர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி

கணவருடன் சமீரா ஷெரிப்

விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா தனது கர்ப்ப காலத்தை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே நாடகத்தில் நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் சமீரா கர்ப்பமாகவும் இருக்கிறார். அவரும், கணவர் சயீத் அன்வரும் டீ சர்ட் அணிந்துகொண்டு தங்களுக்கு குழந்தை விரைவில் வர இருப்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றி வருகிறார். அண்மையில் குடும்பத்தினருடன் சென்று கோவிட் வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதையும் வீடியோவாக பதிவு செய்திருந்தார். மேலும், மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

  ஆனால், அந்த வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஏனெனில் தடுப்பூசி போட்டு கொண்ட போது சமீராவுடன் அவரது கணவரும் இருந்தார். அப்போது ஊசி போட சமீரா மிகவும் பயந்த நிலையில் அவரது கணவர் அரவணைத்து கொண்ட காட்சிகள் இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓவர் சீன் என கமெண்ட்ஸ் செய்திருந்தனர். தொடந்து நெகடிவ் கமெண்ட்ஸ் அதிகரித்த நிலையில் சமீரா மற்றும் அவரது கணவரும் ஒரு வீடியோவை ஷேர் செய்தனர். அதில் அனைவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை பார்த்தால் பயம் இருக்கும். அப்படி தான் எனக்கு ஊசி என்றால் பயம் என நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தனர்.

  https://www.instagram.com/p/CNh4_lAgthC/?utm_source=ig_embed&ig_rid=afef956b-2dd7-4a29-a211-d77dca425166

  இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா trampolineல் ஒரு சிறுவனுடன் குதிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில் நான் ஆக்டிவாக இருக்கும் போது எனது குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி குதிக்கலாமா? என கமெண்ட்ஸ் செய்தனர். 'நான் குதிக்கவில்லை, trampolineல் தான் இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Sameera Sherief (@sameerasherief)


  முன்னதாக காஞ்சனா படத்தில் வரும் வீரா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கமென்டில் திட்டித் தீர்த்தனர். இதனையடுத்து தன்னை விமர்சித்தவர்களுக்கும், அறிவுரை கூறியவர்களுக்கும் பதிலடி கொடுத்த சமீரா, நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். பயப்படத் தேவையில்லை என கூறிருந்தார்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து விமர்சனங்கள் வந்தாலும் அதனை காதில் வாங்கிகொள்ளாத சமீரா இன்றும் உன்னாலே பாடலுக்கு நடனமாடியவாறு வீடியோ ஷேர் செய்துள்ளார். விமர்சனங்கள் என்ன வந்தாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் கூலாக தனது கர்ப்பகாலத்தை சமீரா என்ஜாய் செய்து வருகிறார். அவருக்கு கணவரும் அவருக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: