சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள். அதே போன்று அவர்களை சுற்றி எப்போதும் சர்ச்சைகளும், விவாதங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். இது பலருக்கும் பழகி போன ஒன்றாக மாறி இருக்கும். ஆனால், இப்படி சர்ச்சைகளை எப்போதும் முக்கிய செய்தியாக கொண்டிருப்பவர்களில் டாப் இடத்தில் உள்ளவர் நடிகர் சிம்பு தான். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இருப்பினும் சிம்புவை சுற்றி எல்லா நேரங்களிலும் எப்படியாவது சர்ச்சை இருப்பது வழக்கமாக இருக்கிறது. இவர் சினிமாவில் ஒரு கட்டத்தில் அதிக சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதன் பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து கொண்டார். பிறகு தற்போது புதிய அவதாரம் எடுத்து, புத்துணர்வோடு மீண்டும் திரும்பி வந்துள்ளார். நடிகர் சிம்புவின் நடவடிக்கைகளில் சமீப காலமாக பல மாற்றங்கள் தெரிகின்றன.
குறிப்பாக அவரது முதிர்ச்சியான பேச்சு, தன்னடக்கம், அமைதியான பண்பு என உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பல்வேறு மாற்றங்கள் இவருகுள்ளும் ஏற்பட்டதாக தோன்றுகிறது. இது குறித்து சிம்புவே பல பேட்டிகளில் கூறி உள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாநாடு படம் இதற்கு ஏற்றார்போல இவரை மீண்டும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் வெற்றியினால் மீண்டும் சினிமா துறையில் நடிகர் சிம்பு அவர்கள் சுறுசுறுப்பாகவும், புது உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறார். இது அவரின் ரசிகர்களுக்கும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த கூடும்.
ALSO Read : நிறைமாத கர்ப்பத்திலும் இப்படியா? ரசிகர்களின் பாராட்டு மழையில் ஆல்யா மானசா!
முன்பெல்லாம் சிம்பு அதிக சர்ச்சைகளில் சிக்கியதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரின் வெளிப்படை தன்மைதான். இவர் எப்போதும் தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசிவிடுவார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். ஆனால், தற்போது அதையெல்லாம் தாண்டி தன் வேலைகளில் மட்டுமே குறிப்பாக கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அவரின் தற்போதைய படங்களின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இவரின் இந்த புதிய பாணியை தான் விஜய் டிவியின் பிரபல குக் வித் கோமாளியின் மூலம் பலரின் இதயத்தை கொள்ளை அடித்த தர்ஷா குப்தாவும் பின்பற்றி வருவது போன்று உள்ளது. ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களின் மூலம் பிரபலமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க உள்ளார். மேலும் மிகவும் பிஸியான நாயகியாகவும் இவர் உருவெடுத்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து ஏராளமான படவாய்ப்புகளை தர்ஷா குப்தா பெற்றுள்ளார்.
ALSO Read : சின்னத்திரை டி.ஆர்.பி-யை தட்டித்தூக்கிய Roja... இந்திய அளவில் சாதனை!
இவரின் புகழுக்கு ஏற்ப பல ரசிகர்களும் உருவாகி உள்ளனர். அதன்படி சமூக வலைதளங்களில் இவருகென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் எந்த வகையான பதிவுகளை போட்டாலும் பலர் லைக் செய்து வருகின்றனர். தர்ஷா குப்தா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிம்புவின் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் ஒரு விஷயத்தை குறிப்பிடுள்ளார்.
அந்த வீடியோவில் சிம்பு தனது சினிமா அனுபவத்தை குறித்து பேசி உள்ளார். அதில் 'யார் செருப்பால் அடித்தாலும், அசிங்கமாக பேசினாலும் அதை எல்லாம் நாம் காதில் வாங்கி கொள்ளாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அவர்கள் அது போன்று பேசுவது நமது வளர்ச்சியை தடுப்பதற்காக மட்டுமே தான்' என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதை தர்ஷா குப்தா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தனது நிலைப்பாட்டையும் வெளிக்காட்டி உள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.