Bharathi Kannamma Serial Actress: நீச்சல் குளத்தில் கர்ப்பகால போட்டோஷூட் செய்த ஃபரீனா - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஃபரீனா

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பப்படும் போது வீட்டில் உள்ள பெண்களே அதிகம் பார்த்து வந்தனர். பின்னர், கண்ணம்மா தன் கணவர் பாரதியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற எபிசோட்கள் மூலமாக இணையத்தில் பெரிதாக பேசப்பட்டார். இப்போது இந்த சீரியலுக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அன்றிலிருந்தே பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர். இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம்.இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே ஃபரினா கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அவர் விலகுவதாக வதந்திகள் வெளிவந்தது. இதற்கு பதிலளித்த ஃபரினா, நான் தற்போது சீரியலில் இருந்தும் விலகும் முடிவில் இல்லை, எனக்கு நடிப்பதில் தற்போதும் எவ்வித பிரச்னையும் இல்லை என விளக்கம் அளித்தார்.

Also Read : விஜய் சேதுபதி மிகப்பெரிய சாப்பாட்டு பிரியர் - மாஸ்டர் செஃப் இயக்குனர் சஞ்சீவ் குமார்

 மேலும் ஃபரினா தான் கர்ப்பமாக இருக்கிறார் வெண்பா அல்ல என்றும் தெரிவித்திருந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் அண்மையில் சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தவாறு வயிறு தெரியும் வகையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபரினா ஷேர் செய்துள்ள நிலையில், இதுவரை 1.30 லட்சம் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர், மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Also Read : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசை கொலை செய்தது யார்? விரைவில் வெளியாகப்போகும் உண்மை..முன்னதாக கருப்பு புடவையில் மிக ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்கு லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  
View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

தொடர்ந்து விஜய் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
 
Published by:Tamilmalar Natarajan
First published: