Home /News /entertainment /

மனைவி கையால் சிறந்த மகன் விருது வாங்கிய விஜய் டிவி நடிகர்!

மனைவி கையால் சிறந்த மகன் விருது வாங்கிய விஜய் டிவி நடிகர்!

Vijay Tv Awards | விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் சித்து மனைவியான ஷ்ரேயாவை அழைத்த போது அவர் மறுத்துவிட்டாராம். சிறந்த மகன் என்ற விருதை சித்துவுக்கு வழங்கும் பொழுது பின்னணியில் ஒலிக்கும் டைமிங் பாடல் அந்த காட்சிக்கு அழகாக பொருந்துகிறது.

Vijay Tv Awards | விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் சித்து மனைவியான ஷ்ரேயாவை அழைத்த போது அவர் மறுத்துவிட்டாராம். சிறந்த மகன் என்ற விருதை சித்துவுக்கு வழங்கும் பொழுது பின்னணியில் ஒலிக்கும் டைமிங் பாடல் அந்த காட்சிக்கு அழகாக பொருந்துகிறது.

Vijay Tv Awards | விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் சித்து மனைவியான ஷ்ரேயாவை அழைத்த போது அவர் மறுத்துவிட்டாராம். சிறந்த மகன் என்ற விருதை சித்துவுக்கு வழங்கும் பொழுது பின்னணியில் ஒலிக்கும் டைமிங் பாடல் அந்த காட்சிக்கு அழகாக பொருந்துகிறது.

மேலும் படிக்கவும் ...
பெரும்பாலான தமிழ் டிவி தமிழ் சேனல்கள் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழாவை விமர்சையாகக் கொண்டாடும். சிறந்த சீரியல், சிறந்த நடிகர், நடிகை என்று தொடங்கி, சிறந்த மகன், மகள், மாமியார், என்று விருது பட்டியல் நீளும். அந்த வரிசையில் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் பல ஹைலைட்ஸ் இருக்கின்றன என்றாலும் சமீபத்தில் அதிகமாக ட்ரெண்டாகி வருவது நடிகர் சித்து விருது வாங்கும் காட்சிகள் தான். அந்த வீடியோவை விஜய் டெலிவிஷன் சேனல் தனது யூடியூப் சேனலும் அப்லோடு செய்து இருக்கிறது. இந்த விருதின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் சிறந்த மகன் என்ற விருதை நடிகர் சித்து தனது மனைவி கையால் அந்த விருதை வாங்குகிறார்.

“உனக்காக பொறந்தேனே எனதழகா” என்று பாடல் ஒலிக்கையில் கையில் விருதோடு என்ட்ரி கொடுத்தார் ஷ்ரேயா.

தனது மனைவி ஷ்ரேயாவை அந்த இடத்தில் எதிர்பார்க்காத நடிகர் சித்து மிகவும் ஆச்சரியப்படுகிறார். அதன் பின்னர் மேடையிலேயே அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. பளபளவென்ற கருப்பு நிற சேலையில் நடிகை ஷ்ரேயா மிகவும் அழகாக தோன்றியுள்ளார். சிறந்த மகன் என்ற விருதை சித்துவுக்கு வழங்கும் பொழுது பின்னணியில் ஒலிக்கும் டைமிங் பாடல் அந்த காட்சிக்கு அழகாக பொருந்துகிறது.

நடிகர் சித்து, ராஜா ராணி 2 சீரியலுக்காக சிறந்த மகன் என்ற விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலின் அம்மா சொல் தட்டாத மகனாக நடித்து வருகிறார். சிறந்த ரீல் மகனாக ரியல் மனைவியிடம் விருது பெற்றார் சித்து.


விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் சித்து மனைவியான ஷ்ரேயாவை அழைத்த போது அவர் மறுத்துவிட்டாராம். ஏமாற்றமாக இருந்தாலும், சித்து அதை வெளிகாட்டி கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார். அதே போல, காரணம் கேட்க விரும்பவில்லை என்றும் கூறினார். எனவே, விருது வாங்க மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, ஷ்ரேயா வந்த போது, ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

Read More : பர்சனல் வாழ்க்கை பற்றி கேட்ட நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை சாந்தினி!


பின்னணி டான்சராக இருந்து இப்போது நாயகனாக விருது வாங்குவது வரை உயர்ந்துள்ள சித்தவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் நடிப்பதற்கு முன்பு, நடிகர் சித்து மற்றும் நடிகை ஷ்ரேயா இருவருமே கலர்ஸ் தமிழ் தொடங்கிய புதிதில் திருமணம் என்ற சீரியலில் ஒன்றாக அறிமுகமாகினர். திருமணம் சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி திருமணம் சீரியலில் கணவன் மனைவியாக இவர்கள் இருவரின் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

இவர்களின் உறவு, காதல், பிணைப்பு என்று இவர்களை சுற்றியே கதைக்களம் இருந்தது. சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அந்த அளவுக்கு நேர்த்தியாக இருவரும் நடித்திருந்தனர்! அதேபோல சீரியல் முடிந்த பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறினார்கள். சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை ஷ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி சீரியலில் கதாநாயகி பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் சித்து ராஜா ராணி சீசன் 2வில் நாயகனாக நடித்து வருகிறார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Entertainment, Vijay tv

அடுத்த செய்தி