‘மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட இயக்குநரை அறிவிக்கும் விஜய்?

விஜய்
- News18 Tamil
- Last Updated: March 9, 2020, 3:46 PM IST
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தனது அடுத்த படத்தின் இயக்குநரை நடிகர் விஜய் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை சந்தித்து சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கதை சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கான விடை மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாஸ்டர் படப்பணிகளை முடித்துவிட்டு ஓய்வுக்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள்தான் - சுந்தர்.சி பற்றி சீக்ரெட் வெளியிட்ட குஷ்பு
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள்தான் - சுந்தர்.சி பற்றி சீக்ரெட் வெளியிட்ட குஷ்பு