• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Raja Rani: ராஜா ராணி 2 சீரியலில் நடக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட் - வீட்டை விட்டு வெளியேறுவாரா சந்தியா?

Raja Rani: ராஜா ராணி 2 சீரியலில் நடக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட் - வீட்டை விட்டு வெளியேறுவாரா சந்தியா?

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ப்ரமோ வீடியோவில் தான் சிறந்த மருமகள் என்பதை நிரூபிக்க தவறியதாக எண்ணி வீட்டை விட்டு வெளியேற பையுடன் தயாராகி வருகிறார் சந்தியா.

  • Share this:
விஜய் டிவி சீரியல்களில் பல சீரியல்கள் சீசன் 2-வாக ஒளிபரப்பப்பட்டாலும் தற்போது இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜா ராணி சீசன் 1-ல் செம்பாவாக நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ள நடிகை ஆல்யா மானசாவே, ராஜா ராணி 2-வில் சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். படித்து முடித்த பிறகு ஒரு சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாற விரும்பிய ஹீரோயின் சந்தியா (ஆல்யா மானசா), தன் மகன் மற்றும் குடும்பத்தை மட்டுமே கவனித்து கொள்ள தேவையான ஒரு மருமகளை எதிர்பார்த்த மாமியார், தன் தாய்க்கு நல்ல பிள்ளையாக இருந்தாலும் மனைவியையும் விட்டு கொடுக்காத குணமுடைய ஹீரோ சரவணன் (சித்து) மற்றும் குடும்ப உறுப்பினர்களை சுற்றி கதைக்களம் நகர்ந்து வருகிறது.

படிக்காத பெண் என்று ஏமாற்றி சந்தியாவின் அண்ணன் ஹீரோ குடும்பத்தை ஏமாற்றி சந்தியாவை சரவணனுக்கு கட்டி வைத்து விட்டு வெளிநாட்டிற்கு சென்ற பின்னர் ஒருகட்டத்தில் இந்த உண்மை சரவணன் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. அன்றிலிருந்து சந்தியாவிற்கு மாமணியர் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து எழுகிறது. சந்தியாவின் அண்ணன் மற்றும் அண்ணி வெளிநாட்டில் இருந்து வந்து சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட வேண்டாம் என்று அவளது மாமியாரிடம் (சிவகாமி) கோரிக்கை வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தியா அதே வீட்டில் இருக்க விரும்பும் அனைவரின் பேச்சுக்களையும் கேட்டு மனம் மாறும் மாமியார் ஆனால் சந்தியா ஒரு சிறந்த மருமகள் என்பதை 3 மதங்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்கிறார். இதனை ஏற்று தான் புகுந்த வீட்டிற்கு சிறந்த மருமகள் தான் என்பதை நிரூபிக்க கடுமையாக போராடுகிறார் சந்தியா. எவ்வளவு முயன்றும் நல்வாய்ப்பாக கிடைக்கும் சூழல்கள் அனைத்தும் சந்தியாவிற்கு எதிராகவே மாறி கொண்டே இருக்கின்றன. இதனிடையே வீட்டிலிருக்கும் விலையுயர்ந்த நெக்லஸ் ஒன்று காணாமல் போகிறது. சரவணனின் தம்பி செந்தில் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நெக்லஸை எடுத்து வைத்து கொண்டு சரவணன் மற்றும் சந்தியா மீது பழி போட்டு விடுகின்றனர். சிவகாமி விசாரிக்கும் போது தான் அந்த நகையை எடுக்கவில்லை என்று கூறி கண்ணீர் மல்க அழுகிறார்.ஆனால் மாமியார் உட்பட யாரும் அதை நம்ப மறுக்கும் நிலையில் நெக்லஸ் செந்தில் மற்றும் அர்ச்சனாவிடம் இருப்பதற்கான வீடியோ ஆதாரத்தை காட்டி சந்தியா மீதான களங்கத்தை துடைத்து விடுகிறார் சரவணன். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிந்த நிலையில், ப்ரமோ வீடியோவில் தான் சிறந்த மருமகள் என்பதை நிரூபிக்க தவறியதாக எண்ணி வீட்டை விட்டு வெளியேற பையுடன் தயாராகி வருகிறார் சந்தியா. அவரை அழைத்து செல்ல சந்தியாவின் அண்ணன் மற்றும் அண்ணி சிவகாமியின் வீட்டிற்கு வருகிறார்கள்.

Also read... OTT: இந்த படங்கள் எல்லாம் OTT-க்கு செல்கிறதா? திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!

அப்போது அவர்களிடம் தான் வைத்த சோதனையில் சந்தியா ஜெயித்து விட்டதாகவும், இனிமேல் இந்த வீட்டில் இருக்கணுமா அல்லது வேண்டாமா என்ற முடிவை அவளே எடுக்கட்டும் என்று கூறி விடுகிறார். மாமியாரின் பதிலால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய சந்தியா, நான் இங்கே தான் இருக்க வேண்டும். இந்த குடும்பம் தான் எப்போதுமே என்னுடைய குடும்பம் என்று கூறி சிரிக்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: