Raja Rani: அர்ச்சனாவின் சதிகள் அம்பலம் - ராஜா ராணி 2 சீரியலில் உட்சக்கட்ட திருப்பம்!

ராஜா ராணி 2 சீரியல்

நகையை திருடாத சந்தியா, தான் திருடவில்லை என கண்ணீர்மல்க கூறினாலும் அவரது பேச்சை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.

  • Share this:
ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா அரங்கேற்றி வந்த சதிகளை கதாநாயகன் சரவணன் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதால், உட்சக்கட்ட திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜா ராணி சீரியல் 2 சீரியலில் வெளியாகியுள்ள புரோமோ ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெக்லஸ் நகையை திருடி வைத்துக் கொண்ட அர்ச்சனாவும், அவரது கணவர் செந்திலும் அவரது அண்ணன் மற்றும் அண்ணியான சரவணன் - சந்தியா மீது நெக்லஸ் நகை திருட்டு பழியை சுமத்துகின்றனர். சரவணனின் அம்மா சிவகாமியும் சந்தியா மீது சந்தேகப்பட்டு வீட்டில் மத்தியில் வைத்து நெக்லஸ் குறித்து விசாரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகையை திருடாத சந்தியா, தான் திருடவில்லை என கண்ணீர்மல்க கூறினாலும் அவரது பேச்சை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. ஆனால், சந்தியாவின் கணவரான சரவணன், நகையை திருடியது நாங்கள் இல்லை, யார் திருடினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியும் என டிவிஸ்ட் வைக்கிறார். நகையை அர்ச்சனாவும், செந்திலும் எடுத்து வைத்திருப்பதாக கூறும் சரவணன், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். ஆனால், வீடியோ பதிவை ஏற்கனவே அழித்துவிட்டோம் என்ற மமதையில் இருக்கும் அர்ச்சனா செந்தில் தம்பதி, நகையை திருடி வைத்துக் கொண்டு சொந்த தம்பி மீது அவர்கள் பழிபோடுவதாக கோபத்தில் எகிறி குதிக்கின்றனர்.



இதனை அறியாத சரவணன் வீடியோ கேமாரவை எடுத்து வரச்சொல்லி அந்த ஆதாரத்தை தேடுகிறார். அதில் எந்த வீடியோ பதிவும் இல்லை. இதனை எதிர்பார்க்காத சரவணன் அதிர்ச்சியடைகிறார். எப்படி வீடியோ அழிக்கப்பட்டது என புரியாமல் திணறுகிறார். வீட்டில் இருக்கும் தாயார் சிவகாமி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தியா சரவணன் மீதே சந்தேக பார்வையை முன்வைத்து பேசுகின்றனர். அவர்களின் பேச்சைக் கேட்காத சரவணன், அர்ச்சனாவும் செந்திலும் நகையை திருடி வைத்துக்கொண்டுள்ளதாக மீண்டும் உறுதியாக குற்றம்சாட்டுகிறார்.

ஆதாரம் இல்லை என்பதற்காக அர்சனா தம்பதி சரவணன் சந்தியா மீது கடுமையான வார்த்தைகளால் திட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் செந்தில் உட்சகட்ட கோபத்துக்கு சென்று சரவணனை கீழே தள்ளுகிறார். நிதானமாக இருக்கும் சரவணன், எழுந்து நின்று மீண்டும் அர்ச்சனாவைப் பார்த்து, என்னிடம் ஆதாரம் இருக்கிறது, பொதுவெளியில் போட்டுக்காட்ட வேண்டாம் என நினைக்கிறேன், மரியாதையாக நெக்லஸை எடுத்துவருமாறு அர்ச்சனாவைக் கேட்கிறார். ஆனால் திமிராக பதில் சொல்லும் அர்ச்சனா நகை இல்லை என மீண்டும் திட்டவட்டமாக மறுக்கிறார். அப்போது, தன்னிடம் செல்போனில் இருக்கும் வீடியோ ஆதாரத்தை குடும்பத்தினரிடம் போட்டுக்காட்டி அர்ச்சனாவையும், செந்திலையும் சரவணன் அம்பலப்படுத்துகிறார். இதனை எதிர்பார்க்காத அவர்கள் வெட்கத்தில் தலை குனிகின்றனர். மேலும், தாங்கள் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கின்றனர்.

Also read... Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு பிறந்தநாள் - நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

அர்ச்சனா - செந்திலின் பொய் அம்பலமானதையடுத்து சந்தியாவை சந்தேகப்பட்ட மாமியார் சிவகாமி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அர்ச்சனா தம்பதியை சாடுகின்றனர். அதேநேரத்தில், சந்தியா பெருந்தன்மையாக அர்ச்சனாவையும் அவரது கணவரையும் மன்னித்துவிட்டதாக கூறிவிட்டு கணவருடன் செல்கிறார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறியிருக்கும் ராஜா ராணி சீரியலின் இந்த எபிசோடின் எதிர்பாராத டிவிஸ்ட் டி.ஆர்.பி ரேட்டிங்களிலும் பட்டையை கிளப்பும் என நாடக்குழு எதிர்பார்த்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: