Home /News /entertainment /

தளபதி 64 படப்பிடிப்பில் ரசிகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ்... வைரலாகும் வீடியோ!

தளபதி 64 படப்பிடிப்பில் ரசிகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ்... வைரலாகும் வீடியோ!

விஜய் சேதுபதி - நடிகர்

விஜய் சேதுபதி - நடிகர்

  • News18
  • Last Updated :
    கர்நாடகாவில் தளபதி 64 படப்பிடிப்பில் இருந்த போது ரசிகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி தனது ரசிகருக்கு சிறப்பான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.



    படப்பிடிப்பின் போது தன்னை பார்க்க வந்த ரசிகருக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய் சேதுபதி அவருக்கு கேக் வெட்டி ஊட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor vijay sethupathi, Thalapathy 64

    அடுத்த செய்தி