ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடியில் வெளியாகும் இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி...!

ஓடிடியில் வெளியாகும் இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி...!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

படைப்பில் எவ்வித சமரசமும் கூடாது என்றால், சொந்தமாக படத்தை தயாரிக்க வேண்டும் என்ற புரிதலில் அவர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், கடைசி விவசாயி.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

காக்கா முட்டை மணிகண்டனின் புதிய படம் கடைசி விவசாயி ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தரத்தில் மாறுதலை ஏற்படுத்தியவர் மணிகண்டன். அவரது குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகியவையும் தமிழின் சிறந்த படங்கள் வரிசையில் வருபவை. ஆண்டவன் கட்டளையில் தயாரிப்பு தரப்பில் தரப்பட்ட நெருக்கடி அவரை பாதித்தது. படைப்பில் எவ்வித சமரசமும் கூடாது என்றால், சொந்தமாக படத்தை தயாரிக்க வேண்டும் என்ற புரிதலில் அவர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், கடைசி விவசாயி. விவசாயத்தை மேலோட்டமாக ஊறுகாயாக தொட்டுச் செல்லும் படமில்லை இது. பல மாதங்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, அவர்களின் நடைமுறை இன்னல்களை உணர்ந்தறிந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி  நடித்திருக்கும் இந்தப் படத்தில் யானைப் பாகனாக யோகி பாபு வருகிறார். படத்தில் இடம்பெறும் பிற கதாபாத்திரங்கள் அனேகமாக அனைவரும் கிராமத்தைச் சேர்ந்த தொழில்முறை அல்லாத கலைஞர்கள், விவசாயிகள். படத்தின் பிரதான கதை விஜய் சேதுபதியை மையப்படுத்தயில்லை என்பதால் போஸ்டரில் விவசாய தொழிலாளியின் முகமே விஜய் சேதுபதியின் முகத்தைவிட பெரிதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. படத்தின் முன்னோட்ட காட்சியிலும் அப்படியே

Also read... மாயாவதி குறித்து ஆபாச பேச்சு - தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர்!

இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசையில் திருப்தி ஏற்படாத மணிகண்டன் வெளிநாடு சென்று படத்துக்கு பின்னணி இசை அமைத்ததாக ஒரு தகவல் உலவுகிறது. இசை இளையராஜா என போஸ்டரில் போட்டிருந்தாலும், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் இடம்பெறும் இடத்தில் பாடல்கள் இளையராஜா என்றே போடுகிறார்கள். ஒலி கலை என இருவர் பெயரும் இடம்பெறுகிறது

கடைசி விவசாயி படத்தை திரையரங்கில் வெளியிடவே மணிகண்டன் விரும்பினார். காலம் அதற்கு கனிவாக இல்லாத நிலையில் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. அனேகமாக SonyLIV ஓடிடி தளத்தில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi